அகழும் வேலையை- கடலை; காலத்தை - காலப் பொழுதை; அளக்கர் நுண்மணலை - கடலின் நுண்ணிய மணலை; நிகழும் மீன்களை - கடலில் வாழும் மீன்களை; விஞ்சையை - கல்வியை ஒப்பாக; நினைப்பது என்- நினைப்பது எதற்காக; நின்ற இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும் - நிலைத்து நின்ற இகழ்ச்சி இல்லாத பூதங்கள் ஒழிந்தாலும்; இறுதி செல்லாத புகழ் என - அழிவற்ற புகழைப் போல; சரம் தொலைவு இலாத் தூணியின்பூட்டி - அம்புகள் என்றும் அமைந்த அம்பு அறாத் துணியைத் தன் முதுகுப் புறத்தே கட்டி. |
(17) |
9659. | 'வருக, தேர்!' என, வந்தது - வையமும் வானும் |
| உரக தேயமும் ஒருங்கு உடன் இவரினும், உச்சிச் |
| சொருகு பூ அன்ன சுமையது; துரகம் இன்று |
| எனினும், |
| நிருதர் கோமகன் நினைந்துழிச் செல்வது, ஓர் |
| இமைப்பில். |
|
வையமும் வானும் உரகதேயமும் - மண்ணுளோரும் விண்ணுளோரும் நாகலோகத்தோரும்; ஒருங்கு உடன் இவரினும் - ஒருசேர ஏறினாலும்; உச்சிச் சொருகுபூ அன்னசுமையது - உச்சிப் பூப்போன்ற எளிய சுமையை உடையது; துரகம் இன்று எனினும் - குதிரைகள் இல்லாவிடிலும்; நிருதர் கோமகன் நினைத்துழி ஓர் இமைப்பில்- இராவணன் நினைத்த போது இமை நொடிக்கும் நேரத்தில்; செல்வது - செல்லும் ஆற்றலுடைய தேர்; 'வருக தேர்' என வந்தது - வருக தேர் என்று சொல்லியவுடன் வந்தது. |
(18) |
9660. | ஆயிரம் பரி அமுதொடு வந்தவும், அருக்கன் |
| பாய் வயப் பசுங் குதிரையின் வழியவும், படர் நீர் |
| வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின், வன் |
| காற்றின் |
| நாயகற்கு, வந்து உதித்தவும், பூண்டது நலத்தின். |
|
அமுதொடு வந்தவும்- பாற்கடலில் அமுதத்தோடு பிறந்தனவும்; அருக்கன் பாய்வயப் பசுங் குதிரையின் வழியவும் - சூரியன் குதிரைகளின் மரபில் தோன்றியவும்; படர்நீர் வாய் மடுக்கும் மாவடவையின் வயிற்றின் - பரவிய நீர் எங்கும் பரவியுள்ள வடவாமுகாக்னி வயிற்றிலே; வன்காற்றின் நாயகற்கு வந்துதித்தவும் |