பக்கம் எண் :

266யுத்த காண்டம் 

-  கொடிய   காற்றுக்   கடவுளாம்  வாயு   தேவனுக்குத்
தோன்றியனவுமாகிய; ஆயிரம்பரி நலத்தின் பூண்டது -
ஆயிரம் குதிரைகள் அழகாக கட்டப்பட்டது. 
 

(19)
 

9661.

பாரில் செல்வது, விசும்பிடைப் படர்வது; பரந்த
நீரில் செல்வது; நெருப்பினும் செல்வது; நிமிர்ந்த
போரில் செல்வது; பொன் நெடு முகட்டிடை விரிஞ்சன்
ஊரில் செல்வது; எவ் உலகத்தும் செல்வது, ஓர்

இமைப்பின்.

 

பாரில்  செல்வது  -  நிலத்தில்  செல்வது போலவே;
விசும்பிடைப் படர்வது- வானிலே செல்வது; பரந்த நீரில்
செல்வது
  -  பரப்பமைந்த நீரிலே செல்வது; நெருப்பினும்
செல்வது
- தீயிலும் செல்வது; நிமிர்ந்து போரில் செல்வது
-  தன்னிகரின்றி  போரிலே செல்வது; பொன்முகட்டிடை  -
பொன்னால் அமைந்த வானில்; விரிஞ்சன் ஊரில் செல்வது-
பிரமன் ஊரிலும் செல்வது; ஓர் இமைப்பின் எவ்வுலகத்தும்
செல்வது
- ஓரிமை நொடிக்குள் எந்த உலகத்திலும் செல்வது.
 

(20)
 

9662.

எண் திசைப் பெருங் களிற்றிடை மணி என 

இசைக்கும்

கண்டை ஆயிர கோடியின் தொகையது; கதிரோன்
மண்டிலங்களை மேருவில் குவித்தென வயங்கும்
அண்டம் விற்கும் நான் காசுஇனம் குயிற்றியது 

அடங்க.

 

எண்திசைப் பெருங்களிற்றிடை - எட்டுத் திசையிலுள்ள
பெரிய யானைகளின் கழுத்தில் கட்டிய; மணியென இசைக்கும்-
மணிகள்  போல  ஒலிக்கின்ற; கண்டை  ஆயிர  கோடியின்
தொகையது
  -  கண்டை எனும் வாச்சியம் ஆயிரம்  கோடித்
தொகையை  உடையது; கதிரோன் மண்டிலங்களை  - சூரிய
மண்டிலங்களை;   மேருவில்   குவித்தென - மேருமலையில்
குவித்தாற்    போன்று; வயங்கும்   அண்டம்  -  விளங்கும்
அண்டத்தை; விற்கும் நன்காக இனம்- விலையாகக்` கொளும்
உயர்ந்த   இரத்தினங்களின் கூட்டம்; அடங்க, குயிற்றியது-
முழுவதும் இழைக்கப் பெற்றது. 
  

(21)