9663. | முனைவர் வானவர் முதலினர், அண்டத்து முதல்வர் |
| எனைவர் ஈந்தவும், இகலினில் இட்டவும், இயம்பா |
| வினையின் வெய்யன படைக்கலம், வேலை என்று |
| இசைக்கும் |
| சுனையின் நுண் மணல் தொகையன சுமந்தது, |
| தொக்க. |
|
முனைவர் வானவர் முதலினர் - முனிவரும், தேவரும் முதலானவரும்; அண்டத்து முதல்வர் - உலகில் முதன்மை நிலை பெற்றவரும்; எனைவர் ஈந்தவர் - எப்படிப் பட்டவரும் கொடுத்திட்டனவும்; இகலினில் இட்டவும் - போரில் தோற்றுக் கொடுத்திட்டனவும்; இயம்பா வினையின் - சொல்ல முடியாத கொடிய போர்ச்செயலின்; வெய்யன படைக்கலம் - கொடியனவாம் படைக்கருவிகள்; வேலை என்று இசைக்கும் - வேலை எனக் கூறப்பெறும்; சுனையின் நுண்மணல் தொகையன- நீர்ச் சுனையிலுள்ள மணலின் தொகையை உடையவாகி; தொக்க சுமந்தது - திரண்டவற்றைச் சுமந்தது. |
(22) |
9664. | கண்ணன் நேமியும், கண்ணுதல் கணிச்சியும், |
| கமலத்து |
| அண்ணல் குண்டிகைக் கலசமும், அழியினும், |
| அழியாத் |
| திண்மை சான்றது; தேவரும் உணர்வு அருஞ் |
| செய்கை |
| உண்மை ஆம் எனப் பெரியது, வென்றியின் |
| உறையுள். |
|
கண்ணன் நேமியும் - (அத்தேர்) திருமாலின் சக்கரமும்; கண்ணுதல் கணிச்சியும் - சிவபெருமானின் மழுப்படையும்; கமலத்து அண்ணல்- தாமரையில் வாழும் பிரமனின்; குண்டிகைக் கலசமும் - குண்டிகையாம் பாத்திரமும்; அழியினும் அழியாத் திண்மை சான்றது - அழிந்தாலும் தான் அழியாத வலிமை நிறைந்தது;தேவரும்- வானவரும்; உணர்வரும் செய்கை உண்மை எனப் பெரியது - அறிய முடியாத தன்மை உடைய உண்மையைப் போலப் பெரியது; வென்றியின் உறையுள்- வெற்றிக்கு உறைவிடம். |
(23) |