9665. | அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி, |
| இனையர் என்பது ஓர் கணக்கு இலா மறையவர் |
| எவர்க்கும் |
| வினையின் நல் நிதி முதலிய அளப்ப அரும் |
| வெறுக்கை |
| நினையின் நீண்டதுஓர் பெருங் கொடை அருங் |
| கடன் நேர்ந்தான் |
|
அனைய தேரினை - அப்படிப்பட்ட தேரை; அருச்சனை வரன் முறை ஆற்றி - போற்றித் துதிப்பதை முறையாகச் செய்து; இனையர் என்பது ஓர் கணக்கு இலா - இவ்வளவு பேர் என்ற ஒரு கணக்கு இல்லாத; மறையவர் எவர்க்கும் - வேதியவர் எவர்க்கும்; வினையின் நல் நிதி முதலிய அளப்பரும்- அளிக்க வேண்டியவாறு நல்ல பொருள் முதலியவற்றை அளப்பதற்கு முடியாத; வெறுக்கை - செல்வங்களை; நினையின் - நினைக்க முடியாதவாறு; நீண்டதுஓர் பெருங்கொடை - மிக்க ஒப்பற்ற பெரிய செல்வத்தை அளிப்பதாக; அருங்கடன் நேர்ந்தான் - அரிய கடமையைச் செய்து நிறைவேற்றினான். |
(24) |
9666. | ஏறினான் தொழுது; இந்திரன் முதலிய இமையோர் |
| தேறினார்களும் தியங்கினார், மயங்கினார், |
| திகைத்தார்; |
| வேறு நாம் செயும் வினை இலை, மெய்யின் ஐம் |
| புலனும் |
| ஆறினார்களும் அஞ்சினார், உலகு எலாம் அனுங்க. |
|
தொழுது ஏறினான்- (அந்தத் தேரை இராவணன்) வணங்கி ஏறினான்; இந்திரன் முதலிய இமையோர் தேறினார்களும் தியங்கினார் - இந்திரன் முதலான தேவர்களும் அறிவு சோர்ந்து; மயங்கினார் திகைத்தார் - மயங்கினராய் திகைப்படைந்தனர்; வேறு நாம் செயும் வினை இலை - வேறாகச் செய்கின்ற செயல் இல்லாமையால்; மெய்யின் ஐம்புலனும் - உடலிலுள்ள ஐந்து புலன்களும்; ஆறினார்களும் - அடங்கப் பெற்ற முனிவர்களும்; உலகு எலாம் அனுங்க அஞ்சினர் - உலகங்கள் எல்லாம் வருந்த பயப்பட்டனர். |
(25) |