9667. | 'மன்றல் அம் குழல் சனகி தன் மலர்க் கையான் |
| வயிறு |
| கொன்று, அலந்தலைக் கொடு, நெடுந் துயரிடைக் |
| குளித்தல்; |
| அன்று இது என்றிடின், மயன் மகள் அத் தொழில் |
| உறுதல்; |
| இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென், தலைப்படின்' |
| என்றான். |
|
மன்றல் அம்குழல் சனகி - நறுமணம் மிக்க அழகிய கூந்தலையுடைய சீதை; தன் மலர்க்கையால் வயிறு கொன்று - தனது மலர் போன்ற கைகளால் வயிற்றை அலைத்து; அலந்தலைக் கொண்டு - அலைச்சலைக் கொண்டு;நெடுந்துயரிடைக் குளித்தல் - ஆழ்ந்த துன்பத்தில் மூழ்குதல்; அன்று இது என்றிடின் - அல்லது இது நடக்காது என்று கூறினால்;மயன்மகள் அத்தொழில் உறுதல் - மண்டோதரி அச்செயல்களை அடைதல் ஆம்; தலைப்படின் - நான் போர் செய்யப் புகுந்தால்; இன்று இரண்டின் ஒன்று - இன்றைக்கு இந்த இரண்டு செயல்களில் ஒன்றை; ஆக்குவென் என்றான் - நடைபெறச் செய்வேன் என இராவணன் கூறினான். |
(26) |
9668. | பல களம் தலை மௌலியோடு இலங்கலின், பல் |
| தோள் |
| அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு |
| அலங்க, |
| விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப, |
| உலகு அளந்தவன் வளர்ந்தவன் ஆம் என |
| உயர்ந்தான். |
|
பலகளம் தலை மௌலியோடு இலங்கலின்- பலகழுத்துக்களின் மீது தலைகள் அரசு முடிகளோடு விளங்கலின்; பல்தோள் அலகு அளந்து அறியா- பல தோள்கள் அளவால் அளந்தறிய முடியாமல்; நெடும் படைகளோடு அலங்க - நெடிய படைக்கலன்களோடு ஒளிர்ந்து நிற்க; விலகு அளம் தருகடல் - விலகியுள்ள உப்பளத்தை அளிக்கும் கடலால் சூழப்பட்ட; தரை விசும்பொடு வியப்ப- உலகத்தோர் வானோர் |