பக்கம் எண் :

 இராவணன் சோகப் படலம்27

தவழ்ந்து விளையாடுகின்ற இளம் பருவத்தில்; கோள் அரி
இரண்டு பற்றி
- வலிமையுள்ள  சிங்கங்கள் இரண்டினைப்
பிடித்து; மாட முன்றினில் கொணர்ந்தனை-  மாடத்தின்
முற்றத்தில் கொணர்ந்தாய்; கொணர்ந்து கோபம் மூளுறப்
பொருத்தி
- அவ்வாறு கொணர்ந்து அவற்றிற்குக் கோபம்
மூளுமாறு  ஒன்றோடு  ஒன்று  போர் செய்யுமாறு  விடுத்து; 
முறையின் ஓடி மீள அருவிளையாட்டு- முறையாக ஓடி 
மீளா நிற்க, அவ்விளையாட்டினை; விதியிலாதேன் இன்னம் 
காண்பெனோ
- நல்லூழ்  இல்லாத  யான்  இனி  மேலும் 
காண்பேனோ?
 

அரி - சதங்கையின் உள்ளிடும் பரல். கோள் அரி - 
வலிமை பொருந்திய சிங்கம். ''அரி பொலி கிண்கிணியார்ப்
போவா வடி'' (கலி - 81, 6) ''சுடுபொன் வளைஇய ஈரமை
சுற்றொடு பொடியழல் புறந்தந்த செய்வுறு கிண்கிணி'' (கலி
85-1-2)     ''கிண்கிணி  களைந்த  கால்''   (புறம் 77-1)
முதலானவை காண்க.  இந்திரசித்தின்  இளம் பருவத்தில்
விளையாடிய அஞ்சாமையோடு   கூடிய விளையாட்டினை 
நினைத்து   மண்டோதரியின்    தாயுள்ளம்  தவிக்கின்ற 
தவிப்பினை இப்பாடல்  படம்  பிடித்துக்  காட்டும் நலன்
காண்க. 
 

(49)
 

9235.

'அம்புலி! அம்ம வா!' என்று அழைத்தலும், அமர் 

வெண் திங்கள்

இம்பர் வந்தானை அஞ்சல் என இரு கரத்தின் ஏந்தி, 

வம்புறும் மறுவைப் பற்றி, 'முயல்' என வாங்கும் 

எண்ணம்,

எம் பெருங் களிறே! காண, ஏசற்றேன்; 

எழுந்திராயோ!

 

'அம்புலி! அம்ம வா! என்று அழைத்தலும்-  (இளம்
பருவத்தில்  சந்திரனைக் கண்டு  நீ)  'அம்புலி!  அம்ம  வா!'
என்று அழைத்த அளவில்;  அமர்வெண்  திங்கள் இம்பர்
வந்தானை
- விளக்கமுடைய வெண்திங்கள் இந்த உலகிற்கு
(நின்கட்டளையை மறுக்க அஞ்சி) வந்தவனை, 'அஞ்சல்' என 
இரு கரத்தின் ஏந்தி
- 'அஞ்சாதே   எனக்  கூறியபடி இரு 
கைகளாலும் ஏந்திக் கொண்டு; வம்புறும் மறுவைப்  பற்றி
புதுமையாக உள்ள (நீ நினைத்த) களங்கத்தைப் பற்றி; 'முயல்' 
என வாங்கும் வண்ணம்
- 'முயல்' எனக்  கருதி  எடுக்கும்
தன்மையைக்; காண ஏசற்றேன்- காணுதற்கு ஆசைப்பட்டேன்;
எம்பெருங்களிறே  எழுந்திராயோ -  எம்  பெரிய  களிறு
போன்றவனே