பக்கம் எண் :

270யுத்த காண்டம் 

ஆச்சரியப்பட;   உலகு    அளந்தவன்    வளர்ந்தவன் ஆம் -
மூன்றுலகைத் தன் அடிகளால் அளந்த திருமால் வளர்ந்தது போல; என
உயர்ந்தான்
  - என்று கூறும்படி வளர்ந்தான்.
  

(27)
 

9669.

விசும்பு விண்டு இரு கூறுற, கல் குலம் வெடிப்ப,
பசும் புண் விண்டெனப் புவி பட, பகலவன் பசும் 

பொன்

தசும்பு நின்று இடைந்து இரிந்திட, மதி தகை 

அமிழ்தின்

அசும்பு சிந்தி நொந்து உலைவுற, தோள் புடைத்து

ஆர்த்தான்.

 

விசும்புவிண்டு   இருகூறுற  -   வானம் பிளந்து இருபங்காக;
கல்குலம் வெடிப்ப- மலைகள் வெடித்திட; பசும்புண் விண்டென
- பசிய புண்கள் மேலும்   பிளந்தது போல; பகலவன் பசும்பொன்
தசும்பு  நின்று இடைந்து இரிந்திட
- கதிரவன், பசிய பொற்குடம் 
போல இருந்து தன் இடத்திலிருந்து திரிந்திட; மதி தகை அமிழ்தின்
அசும்பு
- சந்திரனின் பண்பாகிய அமுதத் துளிகளை; சிந்திநொந்து
உலைவுற
  -  சிந்தி   வருந்தித்   துன்பமடைய;   தோள்புடைத்து
ஆர்த்தான்
- தோளைத் தட்டி இராவணன் ஆரவாரம் செய்தான். 
 

(28)
 

9670.

'நணித்து வெஞ் சமம்' என்பது ஓர் உவகையின்

நலத்தால்,

திணித் தடங் கிரி வெடித்து உக, சிலையை நாண்

செறித்தான்;

மணிக் கொடுங் குழை வானவர், தானவர், மகளிர்
துணுக்கம் எய்தினர், மங்கல நாண்களைத் தொட்டார்.
 

வெஞ்சமம் நணித்து- கொடிய போர் அண்மை நிலையில் வந்து
விட்டது;  என்பது ஓர் உவகையின் நலத்தால்  -  எனும்  ஒப்பற்ற
மகிழ்ச்சியின் நன்மையால்; திணித்தடங்கிரி  வெடித்து உக - வலிய
பெரிய   மலை   வெடித்துப்   பொடியாகி   விழ; சிலையை  நாண்
தெறித்தான்
-  வில்நாணைத்   தெறித்தான்; மணிக் கொடுங்குழை
வானவர்
- அழகிய   வளைந்த  குழைகளை   அணிந்த  தேவர்கள்;
தானவர்  - தானவ குலத்தினரது; மகளிர்  -  பெண்டிர்; துணுக்கம்
எய்தினர்
- அச்சமுற்றனர்; மங்கல நாண்களைத் தொட்டார்