(அதனால்) எங்கே தங்கள் தாலி மங்கலக் கயிறு அறுபட்டுப் போகுமோ எனத் தொட்டுப் பார்த்துக் கொண்டனர். |
(29) |
9671. | சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர்ச் சுரிப்பு உற, வீங்க, |
| இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கமுற்று இரிய, |
| 'பரித்திலன் புவி, படர் சுடர் மணித் தலை பலவும் |
| விரித்து எழுந்தனன், அனந்தன்மீது' என்பது ஓர் |
| மெய்யான். |
|
சுரிக்கும் மண்டலம் - வானில் சுழலும் சூரிய, சந்திர மண்டலம்; தூங்கு நீர்ச் சுரிப்பு உற வீங்க - மிகுந்த நீருள்ள கடலிலே சுழற்சி உண்டாகிப் பொங்கவும்; இரைக்கும் பல்லுயிர் யாவையும் - ஆரவாரிக்கும் எல்லா உயிர்களும்; நடுக்கமுற்று இரிய - நடுங்கி நிலை கெடவும்; அனந்தன் - ஆயிரந் தலைகள் கொண்ட அனந்தன் எனும் பாம்பு; புரி பரித்திலன் - உலகைத் தாங்க முடியவில்லை; படர் சுடர் மணித்தலை பலவும் - விரிகின்ற ஒளியுடைய மணிகள் பூண்ட பல தலைகளும்; மீது விரித்து எழுந்தனன் - மேலே படம் விரித்து எழுந்தனன்; என்பது ஓர் மெய்யான் - என்று தோன்றும் வகையில் ஒப்பற்ற உடலை உடையவன் ஆனான் (இராவணன்). |
(30) |
9672. | தோன்றினான் வந்து - சுரர்களோடு அசுரரே |
| தொடங்கி |
| மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய, |
| 'ஊன்றினான் செரு' என்று உயிர் உமிழ்தர, உதிரம் |
| கான்று, நாட்டங்கள் வடஅனற்கு இரு மடி கனல. |
|
சுரர்களோடு அசுரரே தொடங்கி- தேவர்களுடனே அசுரர் தொடங்கி; மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய - மூவுலகிலும் உள்ளவர் யாவரும் அழிய; செரு ஊன்றினான்- போரில் மனம் வைத்தான்; என்று உயிர் உமிழ்தர உதிரம் கான்று - என உயிர்கள் அழியவும் இரத்தம் கக்கவும்; நாட்டங்கள்- கண்கள்; வடஅனற்கு இருமடி கனல- வடவைத் தீக்கு இருமடங்கு கொடுமையாய்த் தீ வீச. |
தானவர் - அசுரர் வேறு அரக்கர் வேறு, இராவணன் அரக்கன் ஆதலின் அவனுக்கு அசுரர் தேவர் இருவரும் எதிரிகளே. |
(31) |