பக்கம் எண் :

272யுத்த காண்டம் 

உலகில் தோன்றிய கலக்கம் கண்டு, சுக்கிரீவன் முதலியோர்
 துணுக்கமுறுதல்
 

9673.

உலகில் தோன்றிய மறுக்கமும், இமைப்பிலர்

உலைவும்,

மலையும் வானமும் வையமும் மறுகுறு மறுக்கும்,
அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற 

அயர்வும்,

தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார்.
 

உலகில் தோன்றிய மறுக்கமும்  -  இவ்வுலகில் தோன்றிய
கலக்கமும்; இமைப்பிலர் உலைவும்-  தேவர்களின் வருத்தமும்;
மலையும் வானமும் வையமும்- மலைகளும் விண்ணும் பூமியும்;
மறுகுறு   மறுக்கும்  -  சுழலும்   சுழற்சியும்;    அலைகொள்
வேலைகள் அஞ்சின
- அலைகள் மிகுந்த கடல்கள் பயந்தனவாய்;
சலிக்கின்ற அயர்வும் - சலிப்புறுகின்ற தளர்ச்சியும்; தலைவனே
முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார்
- சுக்கிரீவன் முதலிய
தடுக்கப்படாத வலிமையை உடையவர் எல்லோரும் பார்த்தனர். 
 

(32)
 

9674.

'பீறிற்றாம் அண்டம்!' என்பது ஓர் ஆகுலம் பிறக்க,
வேறிட்டு ஓர் பெருங் கம்பலை பம்பி மேல் வீங்க,
'மாறிப் பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம்
ஏறிற்று; உற்றுளது என்னைகொலோ?' என எழுந்தார்
 

அண்டம் பீறிற்றாம்  -  இவ்வுலகம் கிழிந்தது; என்பது ஓர்
ஆகுலம் பிறக்க
  -  என்று   எண்ணுமாறு  ஒரு தடுமாற்றம் எழ;
வேறிட்டு   ஓர் பெருங்கம்பலை  -  வேறுபட்ட ஒரு பேரொலி;
பம்பி மேல் வீங்க - நெருங்கி மேலும் மிக; மாறிப் பல்பொருள்
வகுக்குறும் காலத்து
- அழிந்திடப் பல பொருள்களைப் படைக்கப்
பெறும்   பொழுதில்; மறுக்கம் ஏறிற்று - கலக்கம் மிகுதியாயிற்று;
என்னை கோலோ- என்ன காரணமோ; என எழுந்தார் - என்று
இராமன் படையில் எழலானார். 
 

(33)
 

9675.

கடல்கள் யாவையும், கல் மலைக் குலங்களும், காரும்,
திடல் கொள் மேருவும், விசும்பிடைச் செல்வன 

சிவண,