35.இராமன் தேர் ஏறு படலம் |
சிவபெருமான் ஏவ, இந்திரன் தேர் அனுப்பினான்; அவனுடைய தேரோட்டியாகிய மாதலி தேர் கொண்டு வந்தான். தேரின் சிறப்பைக் கவிக்கூற்றால் உணர்கிறோம். அரக்கர் மாயையால் வந்த தேரோ என முதலில் இராமன் ஐயப்பட்டான். பின்னர் உண்மை தெரிந்து, தேவர் அனுப்பிய தேரில் ஏறினான் பெருமான். இவை இப்படலம் கூறும் செய்திகள். |
இராமன் போர்க்கோலம் பூண்டு எழுதல் |
சந்தக் கலிவிருத்தம் |
9677. | தொழும் கையொடு, வாய் குழறி, மெய்ம் முறை |
| துளங்கி, |
| விழுந்து கவி சேனை இடு பூசல் மிக, விண்ணோர் |
| அழுந்து படு பால் அமளி, 'அஞ்சல்' என, அந் நாள், |
| எழுந்தபடியே கடிது எழுந்தனன், இராமன். |
|
முறை - முறையே; தொழும் கையொடு - (இராவணன் வருவதைக் கண்டு அஞ்சிய வானரர்கள் இராமனை நோக்கி) வணங்கிய கைகளோடு; வாய் குழறி - அச்சத்தால் பேச்சுக் குழறி; மெய் துளங்கி - உடம்பு நடுங்க; கவிசேனை - வானர சேனை; விழுந்து இடு பூசல் மிக - நிலத்திலே தடுமாறி விழுந்து எழுப்புகின்ற பேரொலி பெருகிட; இராமன்- அந்த ஆரவாரத்தைக் கேட்ட இராமன்; விண்ணோர் அழுந்து படு பால் அமளி அந்நாள் - (முன்பொரு காலத்திலே) தேவர்கள் துன்பத்தில் அழுந்திய போது எழுப்பிய ஆரவாரத்தைக் கேட்ட திருப்பாற்கடலில் இருந்த அந்தக் காலத்தில்; 'அஞ்சல்' என எழுந்தபடியே- (தேவர்களைப் பார்த்து) 'அஞ்சாதீர்கள்' என அபயம் கூறி எழுந்தருளியது போலவே; கடிது- விரைவாக; எழுந்தனன்- (வானர சேனை அச்சம் தவிருமாறு) இராமபிரான் எழுந்தான். |
(1) |