பக்கம் எண் :

 இராமன் தேர் ஏறு படலம்275

9678.

கடக் களிறு எனத் தகைய கண்ணன், ஒரு காலன்
விடக் கயிறு எனப் பிறழும் வாள் வலன் விசித்தான்,
'மடக்கொடி துயர்க்கும், நெடு வானின் உறைவோர்தம்
இடர்க் கடலினுக்கும், முடிவு இன்று' என

இசைத்தான்.

 

கடக்களிறு எனத் தகைய கண்ணன் - மதம் கொண்ட
ஆண்யானை எனத் தக்க கண்ணன் (இராமன்); ஒரு காலன்-
ஒப்பற்ற இயமனுடைய; விடக் கயிறு எனப் பிறழும் வாள்-
நஞ்சு போன்ற பாசக் கயிறு போல விளங்குகின்ற உடைவாளை;
வலன் விசித்தான்  - வலப் புறத்திலே கட்டிக் கொண்டான்;
'மடக் கொடிதுயர்க்கும்- (உடைவாளைக்   கட்டிக் கொண்ட
இராமபிரான்)    இளங்கொடி    போன்றவளாகிய   சீதையின்
துயரத்திற்கும்; நெடுவானின் உறைவோர் தம்   -   நீண்ட
வானுலகில் வாழ்கின்ற தேவர்களுடைய; இடர்க்கலினுக்கும்-
துன்பமாகிய  கடலுக்கும்; 'இன்று முடிவு' என இசைத்தான்-
'இன்றோடு முடிவு வந்தது' என்று கூறினான்.
 

உயிர்   போக்கும்   ஒற்றுமை பற்றிக் கூற்றுவனின் பாசக்
கயிற்றை விடக்   கயிறு   என்றார். 'சீதை   துன்புற்று மலர்க்
கரத்தால்  வயிறு பிசைந்து வேதனைப்படுதல் அல்லது   மயன்
மகள் (மண்டோதரி) அதே துயரடைதல் இரண்டில் ஒன்று இன்று
செய்து முடிப்பேன்' என்று இராவணன் கூறிய பாடலோடு (கம்ப.
9667) இப்பாடற் கருத்து ஒப்பிட்டுணரத் தக்கது. 
 

(2)
 

9679.

தன் அக வசத்து உலகு தங்க, ஒரு தன்னின்
பின்னக அசத்த பொருள் இல்லை; பெரியோனை
மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ?
இன்ன கவசத்தையும் ஒர் ஈசன் எனலாமால்.
 

தன்   அக   வசத்து  -  தன்னுள்ளே;  உலகு தங்க -
உலகங்களெல்லாம் தங்கியிருக்க;   ஒரு  தன்னின்  - ஒப்பற்ற
தன்னினும்; பின்னக அசத்த பொருள் இல்லை- வேறுபட்டதும்
சக்தியற்றதுமான  வேறு எப்பொருளும் இல்லை; என  - என்பது
போல;   பெரியோனை  -   இராமபிரானை; மன்ன, க(வ்)வ -
நிலைபெற்றுக் கவ்வுமாறு; சத்து உற வரிந்தது என என்கோ?-
உண்மை பொருந்த கட்டப்பட்டது என்று சொல்வதா?; இன்ன