கவசத்தையும் - பிணித்து இராமன் மேனியைப் பற்றிய கவசத்தையும்; ஓர் ஈசன் எனலாம்- ஒரு பரம்பொருளே எனலாம். |
''கடவுள் எல்லாப் பொருளிலும் தங்கி அவ்வப் பொருட்குச் சக்தியைத் தருகிறான் என்பதும், அவனிலும் வேறாகி அவனால் வலிவு பெறாத ஒரு பொருளும் இல்லை என்பதும் நூற்கொள்கை யாதலால். அப்படிப்பட்ட கடவுளுக்குக் கவசம் என்று ஒன்று உடலில் பதிந்து ரட்சையாக நிற்கக் கட்டப்பட்டது என்று சொல்வது பொருந்துவதாகாது; இக் காலத்து ஸ்ரீராமபிரானைத் தன்னுட் கொண்டமையால் அந்தக் கவசத்தையும் ஒரு கடவுள் போலப் பாராட்டுதலாகிய இவ்வளவே நாம் செய்யத்தக்கது'' - வை. மு. கோ. |
(3) |
9680. | புட்டிலொடு கோதைகள், புழுங்கி எரி கூற்றின் |
| அட்டில் எனலாய மலர் அங்கையின் அடக்கிக் |
| கட்டி, உலகின் பொருள் எனக் கரை இல் வாளி |
| வட்டில் புறம் வைத்து, அயல் வயங்குற வரிந்தான். |
|
கூற்றின்- இயமதருமனின்; புழுங்கி எரி அட்டில் எனலாய- நன்றாக எரிகின்ற அடுப்பு என்று சொல்லத்தக்க; அங்கையின் - அழகிய கரங்களிலே; புட்டிலொடு கோதைகள் - விரல் உறைகளையும் கை உறைகளையும்; அடக்கிக் கட்டி- முற்றிலும் (கை) மறையும்படி கட்டிக் கொண்டு; உலகின் பொருள் என- உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் அடங்குமாறு போல; கரை இல் வாளி - அளவற்ற அம்புகளைக் கொண்டுள்ள; வட்டில் - அம்பறாத் தூணியை; புறம் அயல் வைத்து- முதுகுப் பக்கத்திலே; வயங்குற வரிந்தான்- விளங்கும்படி வைத்துக் கட்டினான்; |
புட்டில் - விரலுக்கு இடும் உறை; விரற்சரடு என்றும் பெயர் உண்டு. கோதை - வில்வீரர்கள் கைக்குப் பூணும் உறை. அடு + இல் - அட்டில்; சமையறை இங்கே அடுப்பைக் குறித்தது. |
(4) |
9681. | 'மூண்ட செரு இன்று அளவில் முற்றும்; இனி, |
| வெற்றி |
| ஆண்தகையது; உண்மை; இனி அச்சம் அகல்வுற்றீர், |
| பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலந் தேர் |
| ஈண்ட விடுவீர், அமரில்' என்று, அரன் இசைத்தான். |
|
அமரர்- தேவர்களே!; மூண்ட செரு- மூண்டுள்ள இந்தப் போர்; இன்றளவில் முற்றும்- இன்றோடு முடிந்துவிடும்; இனி வெற்றி ஆண்தகையது- இனிமேல் வெற்றி ஆண்மையாளனான |