பக்கம் எண் :

 இராமன் தேர் ஏறு படலம்277

இராமனுக்கே உரியது; உண்மை- இதுவே உண்மை; இனி
அச்சம் அகல்வுற்றீர்
- இனிமேல் அச்சம் உங்களை விட்டு
நீங்கப் பெற்றீர்கள்; மணி பூண்ட- மணிகள் கட்டியதும்; வய
மா
- வலிமை கொண்ட குதிரைகள் பூட்டப்பட்டதும்; ஆழி-
சக்கரங்கள் உடையதுமான; நிமிர்- உயர்ந்த; பொலந்தேர்
- பொன்தேரினை; ஈண்ட விடுவீர்- (இராமபிரானுக்கு)
விரைவில் அனுப்புவீர்களாக; என்று அரன் இசைத்தான்-
என்று சிவபெருமான் கூறினான். 
 

(5)
 

சிவன் கூற இந்திரன் கட்டளைப்படி தேர் வருதல்
 

9682.

தேவர் அது கேட்டு, 'இது செயற்கு உரியது' என்றார்;
ஏவல் புரி இந்திரனும், அத் தொழில் இசைந்தான்;
'மூஉலகும் முந்தும் ஒர் கணத்தின்மிசை முற்றிக்
கோவில் புரிகேன்; பொரு இல் தேர் கொணர்தி'

என்றான்.

 

தேவர் அது கேட்டு- தேவர்கள் சிவபிரான் சொன்னதைக்
கேட்டு; 'இது   செயற்கு உரியது' என்றார்- 'இச் செயல்
செய்வதற்கு உரியது என்று   (இந்திரனிடம்) சொன்னார்கள்;
ஏவல் புரி இந்திரனும்- சிவபிரான்   ஏவியதைச் செய்யும்
இந்திரனும்; அத்தொழில் இசைந்தான்- அந்தச் செயலைச்
செய்ய ஏற்றுக்கொண்டான்; மூ உலகும் முந்தும்- மூன்று
உலகங்களிலும்   ஏற்பட்டுச் சிறப்பதாயும்; ஓர் கணத்தில்
முற்றி
- ஒரு கணத்தில் (அந்த மூவுலகங்களையும்) முழுவதாகச்
சுற்றிவருவதாயும்; கோவில் புரிவேன்- சிறப்புள்ள  தேரை
இராமனுக்கு ஏற்ற கோவிலாகச் செய்வேன்; பொரு இல் தேர்
கொணர்தி
- ஒப்பற்ற தேரினைக் கொண்டு வருக; என்றான்-
என (மாதவியாகிய தன் சாரதியிடம்) கூறினான்.
 

வெறும்   போர்த்   தேராக   அன்றி    இராமபிரான்
எழுந்தருளுவதாலும் அவதார நோக்கம் நிறைவேற்றுவதற்கு
உரியதாகலானும் 'தேரைக் கோவிலாக்குவேன் என்றான். 
 

(6)
 

மாதலி கொணர்ந்த தேரின் சிறப்பு
 

9683.

மாதலி கொணர்ந்தனன், மகோததி வளாவும்
பூதலம் எழுந்து படல் தன்மைய பொலந் தேர்;