பக்கம் எண் :

278யுத்த காண்டம் 

சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண்
பாதம் என நின்றது, படர்ந்தது விசும்பில்.
 

மகோததி   வளாவும்  -  பெருங்கடல் சூழ்ந்துள்ள; பூதலம்
எழுந்து படல் தன்மைய
- பூவுலகமே எழுந்து இயங்குவது போன்ற
தன்மை கொண்ட; பொலம் தேர் - பொன்மயமான தேரை; மாதலி
கொணர்ந்தனன்
  -  மாதலி   கொண்டு   வந்தான்;   சீத  மதி
மண்டலமும்
 - குளிர்ச்சி கொண்ட சந்திர   மண்டலமும்;   ஏனை
உளவும்
  -  மற்றும் (மேல்   மண்டலத்தில்)    உள்ளனவும்; திண்
பாதம் என
  -  தன்னுடைய வலிமையான பாதம் என்று சொல்லும்
படியாக;   நின்றது -  (தேவர்கள்   அனுப்பிய   தேர்    நின்றது;
விசும்பில்  படர்ந்தது  - (தன்   உயரத்தால் ஆகாயத்தின் மேல்
பரவியது.
 

மகா + உததி = வளாவுதல் - சூழ்தல் 
  

(7)
 

9684.

குலக் கிரிகள் ஏழின் வலி கொண்டு உயர்

கொடிஞ்சும்,

அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும்,
கலக்கு அற வகுத்தது; கதத்து அரவம் எட்டின்
வலக் கயிறு கட்டியது; முட்டியது வானை.
 

குலக்கிரிகள் ஏழின் வலி கொண்டு - ஏழு குல மலைகளின்
வலிமையைத்  தன்னிடம்   கொண்டதாய்;  உயர்  கொடிஞ்சும் -
உயர்ந்த  கொடிஞ்சு  என்னும்  உறுப்பையும்; அலைக்கும்  உயர்
பாரின் வலி 
- (அலைகளால்  இடையறாமல்) அலைக்கப்படுகின்ற
நிலவுலகத்தின்    வலிமை   (கொண்டதுபோன்ற);    ஆழியினின்
அச்சும் 
-   சக்கரத்தில்   பொருந்திய   அச்சினையும்; கலக்கு
அற வகுத்தது 
- இடைவெளி இல்லாமல் நெருக்கமாகக் கோக்கப்
பட்டது அந்த தேர்; கதத்து அரவம்  எட்டின் - சினம் கொண்ட
எட்டுப்   பெருநாகங்களையும்; வலக் கயிறு கட்டியது  - வலிமை
கொண்ட  கயிறாகக்   கொண்டு   கட்டப்பட்டது,   அந்த   தேர்;
வானை முட்டியது  - (அத்தேர்) வானத்தையே   முட்டிக்கொண்டு
நின்றது.
 

குலக்   கிரி   -  உயர்வுக்கும்   உயர்வான  மலைகள். நல்ல 
பொருள்களின்    மேன்மையைக்    குறிக்கச்    'சாதி'     என்ற
அடைமொழிகொடுத்துப் பேசுவது மரபு. குலக்கிரிகள் ஏழு; கயிலை,
இமயம்,  மந்தரம், விந்தம்,  நிடதம், ஏமகூடம், நீலம்  என்பனவாம்.
கச்சியப்பரின் கந்தபுராணம் இவ்வேழோடு கந்தமாதனத்தையும்