பக்கம் எண் :

 இராமன் தேர் ஏறு படலம்279

சேர்த்துக் குலக் கிரிகள் எட்டு எனப் பேசும் (கந்த, ஆற்றுப்-16).
தேர்   விரைந்து    செல்லும்போது    அதில்     இருப்போர் 
விழுந்துவிடாமல்  நிற்பதற்குப்  பற்றிக் கொள்ளும் உறுப்பினைக்
கொடிஞ்சு  என்பர். அரவம்  எட்டு, வாசுகி, அனந்தன்,  தக்கன்,
சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன். 
 

(8)
 

9685.

ஆண்டினொடு நாள், இருது, திங்கள், இவை 

என்னா,

மீண்டனவும் மேலனவும் விட்டு, விரி தட்டில்
பூண்டு உளது; தாரகை மணிப் பொரு இல் கோவை
நீண்ட புனை தாரினது; நின்றுளது குன்றின்.
 

மீண்டனவும்     மேலனவும்       -      கடந்தவையும்
வரப்போவனவுமாகிய; ஆண்டினொடு   -  ஆண்டையும்;  நாள்,
இருது,  திங்கள்  இவை என்னா
   -  கிழமை, பருவம், மாதம்
என்ற இவற்றின் காலப்  பகுதிகளையும்; விரி தட்டில் பூண்டுளது
-  விரிந்த தேர்த்தட்டிலே குறிக்கப்பட்டுள்ளது;   தாரகை மணி -
நட்சத்திர  மணிகள் கொண்டு  கோத்த; பொரு இல் கோவை-
ஒப்பற்ற  மாலைகளையும்; புனை தாரினது - அழகு செய்யப்பட்ட
மாலைகளையும்  உடையது; குன்றின் நின்றுளது - மலைபோலப்
பெருமிதமாகப் போர்க்களத்திலே வந்து நின்றது.
 

தேர்த் தட்டிலே காலக் குறிப்புகள் அமைப்பது தொன்மையான
ஒரு    வழக்கமெனத்   தெரிகிறது.   இக்காலங்களுக்கு   உரிய
தெய்வங்கள்  தேர்த்தட்டில் இடம் பெறும்   என்ற   குறிப்பினை
வை.மு.கோ.   தருகிறார்.  ''ஆண்டு   முதலியன   அவற்றிற்குரிய
தேவதைகளையாம். தேவ  மயம் அந்தேரென்க''  என்பது  அவர்
குறிப்பு. 
 

(9)
 

9686.

மாதிரம் அனைத்தையும் மணிச் சுவர்கள் ஆகக்
கோது அற வகுத்தது; மழைக் குழுவை எல்லாம்
மீது உறு பதாகை என வீசியது; மெய்ம்மைப்
பூதம் அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா!
 

மாதிரம் அனைத்தையும் - எல்லாத் திசைகளையும்; மணிச்
சுவர்களாக
- அழகிய சுவர்களாகக்கொண்டு;கோது அற வகுத்தது
- (அந்தத் தேர்)  குற்றமற  உருவாக்கப்பட்டது; மழைக் குழுவை
எல்லாம்
-  மேகக்  கூட்டம் அனைத்தையும்; மீது உறு பதாகை
என
  - (தேர்) மேல் கட்டப்பட்ட பெரிய கொடிகளாகக் கொண்டு;
வீசியது- ஆடச் செய்தது; மெய்ம்மைப் பூதம் அவை