(அந்த ஆடலை மீண்டும் செய்து காட்ட) எழுந்திருக்க மாட்டாயோ? |
அம்புலி - சந்திரன், அம்ம - கேட்டற் பொருளைத் தழுவி வரும் இடைச்சொல். 'அம்ம கேட்பிக்கும்' (தொல், சொல் - 278) இம்பர் - இவ்வுலகம். வம்பு - புதுமை. ஏசற்றேன் - ஆசைப்பட்டேன். |
(50) |
9236. | 'இயக்கியர், அரக்கிமார்கள், விஞ்சையர் ஏழைமாதர், |
| முயல் கறை பயிலாத் திங்கள் முகத்தியர், முழுதும் |
| நின்னை |
| மயக்கிய முயக்கம்தன்னால், மலர் அணை அமளிமீதே |
| அயர்த்தனை உறங்குவாயோ? அமர் பொருது |
| அலசினாயோ? |
|
முயல் கறை பயிலாத் திங்கள் முகத்தியர் - முயற் களங்கம் பொருந்தாத சந்திரனைப் போன்ற முகத்தினை உடையவரான; இயக்கியர், அரக்கிமார்கள் விஞ்சையர் ஏழை மாதர்- இயக்கியரும், அரக்கியரும், வித்யாதர மகளிருமான நின் மனைவியர்; முழுதும் நின்னை மயக்கிய முயக்கம் தன்னால்- நின்னை முழுதுமாகத் தம் காதலால் மயக்கிச் சேர்ந்த புணர்ச்சியாலாகிய மெலிவினால்; மலர் அணை அமளிமீதே அயர்த்தனை உறங்குவாயோ?- மலரணை பரப்பிய படுக்கை மீது சோர்ந்து உறங்குகின்றாயோ? அமர் பொருது அலசினாயோ- (அல்லது) போர் செய்து இளைத்தமையால் படுத்திருக்கின்றாயோ? |
மயக்கிய முயக்கம் - முயக்கத்தாற் பிறந்த அவசத்தைக் குறித்தது. ஏழையர் - பெண்கள். ''எருதேறி யேழையுடனே'' (தேவா 1171-2) அலசுதல் - வருந்துதல்; இளைத்தல். ''காதலால் உளதாகிய அயர்ச்சியும், பொருதமையால் உளதாகிய இளைப்பும் அன்றி அசைவறக் கிடத்தற்குக் காரணம் வேறு இருக்க இயலாது என்று இந்திரசித்தின் இறப்பினால் பொங்கும் துன்பத்தை மாற்ற முயல்கிறாள் மண்டோதரி. |
(51) |
9237. | 'முக்கணான் முதலினோரை, உலகு ஒரு மூன்றினோடும், |
| புக்க போர் எல்லாம் வென்று நின்ற என் புதல்வன் |
| போலாம், |
| மக்களில் ஒருவன் கொல்ல, மாள்பவன்? மான மேரு |
| உக்கிட, அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா! |