ஐந்தின் - அழியா நிலை கொண்ட ஐந்து பூதங்களினுடைய; வலியின் பொலிவது - வலிமையோடு அழகாக அமைவது. |
(அம்மா - வியப்பைக் குறிக்கும் இடைச்சொல்) |
(10) |
9687. | மரத்தொடு மருந்து உலகில் யாவும் உள வாரித் |
| தரத்தொடு தொடுத்த கொடி தங்கியது; சங்கக் |
| கரத்தொடு தொடுத்த கடல் மீது நிமிர் காலத்து, |
| உரத்தொடு கடுத்த கதழ் ஓதை அதன் ஓதை. |
|
மரத்தொடு மருந்து - மரங்கள் மற்றும் பூண்டுகள் என; உலகில் உள யாவும் வாரி - உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும் வாரி எடுத்து; தரத்தொடு தொடுத்த - உயர்தரம் கொண்டு தொடுக்கப்பட்ட; கொடி தாங்கியது- கொடியைத் தாங்கியிருப்பது; சங்கக்கரத்தொடு தொடுத்த கடல்- கூட்டமாயுள்ள அலைகளோடு பொருந்திய கடலானது; மீது நிமிர் காலத்து - மேலே பொங்கி வருகின்ற (ஊழிக்) காலத்து; உரத்தொடு கடுத்த கதழ் ஓசை - வலிமையொடு விரைவுகொண்டு உக்கிரமாக எழுப்பும் ஓசையே; அதன் ஓதை- அந்தத் தேரின் ஓசையாகும். |
(11) |
9688. | பண்டு அரிதன் உந்தி அயன் வந்த பழ முந்தைப் |
| புண்டரிக மொட்டு அனைய மொட்டினது; பூதம் |
| உண்டவை வயிற்றிடை ஒடுக்கி உமிழ்கிற்போன், |
| அண்டச மணிச் சயனம் ஒப்பது, அகலத்தின்.* |
|
பண்டு- முன்னம் ஆதியிலே;அரிதன் உந்தி அயன் வந்த- திருமாலின் உந்தியில் நான்முகன் தோன்றுதற்கு இடமாகிய; பழ முந்தைப் புண்டரிக மொட்டு அனைய - பழமையான தாமரை மொட்டைப் போன்ற; மொட்டினது - மொட்டு என்னும் உறுப்பினை உடையது (அந்தத் தேர்); பூதம் உண்டவை வயிற்றிடை ஒடுக்கி- பூத விகாரங்களாகிய உயிரிகளையெல்லாம் தன் வயிற்றுள் ஒடுக்கி; உமிழ்கிற்போன்- (மீண்டும் படைப்புக் காலத்தில்) உமிழ வல்லவனாகிய திருமாலின்; அண்டச மணிச் சயனம் ஒப்பது அகலத்தில் - ஆதி சேடனாகிய அழகிய படுக்கையை அகலத்தில் ஒத்திருப்பது. |
(12) |