9689. | வேதம் ஒரு நாலும், நிறை வேள்விகளும், வெவ் வேறு | | ஓதம் அவை ஏழும், மலை ஏழும், உலகு ஏழும், | | பூதம் அவை ஐந்தும், எரி மூன்றும், நனி பொய் தீர் | | மா தவமும், ஆவுதியும், ஐம் புலனும், மற்றும். | | (அந்தத் தேரானது) வேதம் ஒரு நாலும்- நான்கு வேதங்களும்; நிறை வேள்விகளும் - நிறைவுடைய வேள்விகளும்; வெவ்வேறு ஓதம் அவை ஏழும் - தனித்தனியாக உள்ள கடல்கள் ஏழும்; மலை ஏழும் - ஏழு (குல) மலைகளும்; உலகு ஏழும் - ஏழு உலகங்களும்; பூதம் அவை ஐந்தும் - ஐந்து பூதங்களும்; எரி மூன்றும்- மூவகை அக்கினிகளும்; நனி பொய் தீர் மா தவமும் - மிகவும் பொய்ம்மையினின்று நீங்கிய பெருந்தவமும்; ஆவுதியும் - (தேவர்க்கு வழங்கப்படும்) ஆகுதிகளும்; மற்றும்- மேலும்... | (13) | 9690. | அருங் கரணம் ஐந்து, சுடர் ஐந்து, திசை நாலும், | | ஒருங்கு அரணம் மூன்றும், உழல் வாயு ஒரு பத்தும், | | பெரும் பகலும், நீள் இரவும் என்று இவை பிணிக்கும் | | பொரும் பரிகள் ஆகி நனி பூண்டது, பொலந் தேர். | | பொலந்தேர் - பொன்மயமான அந்தத் தேர்; அருங் கரணம் ஐந்து - இந்திரியங்கள் ஐந்து; சுடர் ஐந்து - ஐந்து நெருப்புகள்; திசை நாலும் - மேலவற்றோடு நான்கு திசைகள்; ஒருங்கு அரணம் மூன்றும்- ஒருங்கே இணைந்து செயல்பட்ட மூன்று மதில்கள்; உழல் வாயு ஒரு பத்தும் - திரிகின்ற பத்து வகைக் காற்றும்; பெரும்பகலும் - பெரிய பகற்காலம்; என்று இவை - எனக் குறிக்கப்பட்ட இவை; பொரும் பரிகள் ஆகி- போர்க்குணம் உடைய குதிரைகளாகி; நனி பூண்டது- நன்கு பூணப்பட்டது. | வேதம் நான்கு, பூதம் ஐந்து, கரணம் ஐந்து, புலன் ஐந்து, திசை நாலு இவை தெளிவு எஞ்சியவற்றின் விரிவு வருமாறு; வேள்விகள் ஐந்து: கடவுள் வேள்வி, பிரம வேள்வி, பூத வேள்வி, மானிட வேள்வி, தென்புலத்தார் வேள்வி. கடல் ஏழு: உவர்நீர்க் கடல், நெய்க்கடல், கருப்பஞ் சாற்றுக்கடல், தேன் கடல், மலை ஏழு: கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம் இவற்றோடு கந்த மாதனத்தைச் சேர்த்து மலை எட்டு எனவும் உண்டு. உலகு ஏழு: பூலோகம், தவலோகம், சத்தியலோகம், மகாலோகம், சன லோகம், தவ லோகம், சத்திய லோகம். எரி மூன்று (வேள்வித்தீ): காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி சுடர் (நெருப்பு) ஐந்து நான்கு திசையில் |
|
|
|