பக்கம் எண் :

282யுத்த காண்டம் 

நான்குடன்    மேலே   உள்ள   கதிரவனைச் சேர்த்து
பஞ்சாக்கினிகள் என்பர்;   இராகம்,   கோபம்,   காமம்,
சடம், தீபனம் ஆகியவை பஞ்சாக்கினிகள் எனலும் ஒன்று.
அரணம் மூன்று: பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால்
ஆகிய திரிபுர மதில்கள். தச வாயுக்கள்: பிராணன், அபானன்,
சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன்,
தேவதத்தன், தனஞ்சயன் என்பன. 
 

(14)
 

மாதலி இராமனிடம் தேர் கொணர்ந்து அதன் சிறப்பைச் செப்புதல்
 

9691.

வந்ததனை வானவர் வணங்கி, 'வலியோய்! நீ
எந்தை தர வந்தனை; எமக்கு உதவுகிற்பாய்;
தந்தருள்வை வென்றி' என நின்று, தகை மென் பூச்
சிந்தினர்கள்; மாதலி கடாவி, நனி சென்றான்.
 

வந்ததனை- அவ்வாறு வந்த தேரை; வானவர் வணங்கி-
தேவர்கள்  வணங்கி;  (மாதலியை   நோக்கி) 'வலியோய்!-
வல்லமை உடையவனே!; நீ எந்தை தர வந்தனை- நீ எம்
தலைவனாகிய   இந்திரன்  அனுப்பியதால்  வந்திருக்கிறாய்;
எமக்கு  உதவுகிற்பாய்  -  எங்களுக்கு உதவும்   ஆற்றல்
உடையவன் நீ; வென்றி தந்தருள்வை- வெற்றி தந்தருள்வாயாக';
என  நின்று  -  என்று  சொல்லி  நின்று; தண்மென்  பூச் 
சிந்தினர்கள்
- குளிர்ந்த மெல்லிய மலர்களைச் சொரிந்தனர்;
மாதலி....; கடாவி  -  தேரைச் செலுத்திக்  கொண்டு; நனி
சென்றான்
- விரைந்து சென்றான். 
 

(15)
 

9692.

'வினைப் பகை விசைக் கொடு விசும்பு உருவி,

மான

மனத்தின் விசை பெற்றுளது வந்தது' என

வானோடு

அனைத்து உலகமும் தொழ, அடைந்தது,

அமலன்பால்;

நினைப்பும் இடை பிற்பட, நிமிர்ந்தது நெடுந் தேர்.
 

நெடுந்தேர் - அந்தப் பெரிய தேர்; வினைப்பகை விசைக்
கொடு
   -   ஆன்மாவின் பகையாகிய வினையின் வேகத்தைக்
கொண்டு; விசும்பு உருவி- ஆகாயத்தை ஊடுருவிக்கொண்டு; மான
மனத்தின் விசை பெற்றுளது
- பெருமைக்குரிய மன வேகத்தைப்
பெற்றதாய்;   வந்தது  -  வந்து சேர்ந்தது; என   -   என்று
பெருமைப்படுத்தி; வானோடு அனைத்து உலகமும் தொழ