பக்கம் எண் :

 இராமன் தேர் ஏறு படலம்283

வானுலகத்தோடு   எல்லா   உலகங்களும்  வணங்கும்படியாக;
அமலன்பால் அடைந்தது  - குற்றமற்றவனாகிய இராமனிடம்
வந்துசேர்ந்தது; நினைப்பும் இடை பிற்பட- எண்ணம்கூடப்
பின்னடையும்படியாக; நெடுந்தேர்  -  அந்தப்  பெரிய  தேர்;
நிமிர்ந்தது- உயரமாக வந்து நின்றனது. 
 

(16)
 

தேர் கண்ட இராமன் நினைப்பும் வினாவும்
 

9693.

'அலரி தனி ஆழி புனை தேர் இது எனில், அன்றால்;
உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால்;
நிலைகொள் நெடு மேரு கிரி அன்று; நெடிதுஅம்மா;
தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ?
 

அலரி- சூரியனுடைய; தனி ஆழி புனை தேர் இது எனில்,
அன்று
- ஒற்றைச் சக்கரம் பூண்ட தேர்தான் இது எனின் அப்படி
இல்லை;  உலகின் முடிவில் - உலகங்களின் அழிவுக் காலத்தில்
எழுகின்ற; பெரிய  ஊழ் ஒளி  இது அன்று  -  பெரிய ஊழிக்
காலத்தில்   தோன்றும்   தீயின்    ஒளிகொண்டது  இது அன்று;
நிலைகொள் நெடு  மேரு கிரி அன்று- நிலைபேறுடைய பெரிய
மேரு   மலையும்   அன்று;  நெடிது - மிகவும் உயரமானது இது;
(அம்மா என்ற  சொல் வியப்புக்   குறிப்பானது); தலைவர்   ஒரு
மூவர்
  - தலைவர்களாகிய ஒப்பற்ற மும்மூர்த்திகளின்; தனிமானம்
இதுதானோ
- சிறந்த விமானம் இதுதானோ? 
 

(17)
 

9694.

'என்னை இது நம்மை இடை எய்தல்?' என 

எண்ணா,

மன்னவர்தம் மன்னன் மகன், மாதலியை, 'வந்தாய்,
பொன்னின் ஒளிர் தேர் இது கொடு, ஆர் புகல?'

என்றான்

அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான்:
 

'என்னை   இது   நம்மை  இடை எய்தல்'- இந்தத் தேர்
நம்மிடம்   எய்தியது   ஏன் எப்படி?'; என எண்ணா   - என்று
எண்ணி; மன்னவர்தம் மன்னன் மகன்  - மன்னர் மன்னனாகிய
இராமன்; மாதலியை  -  மாதலியை நோக்கி; பொன்னின் ஒளிர்
தேர்   இது   கொடு  
-   பொன்போல் ஒளிவீசுகின்ற இந்தத்
தேரைக்   கொணர்ந்தது;   யார்   புகல- எவர் கட்டளைப்படி?';
என்றான்