பக்கம் எண் :

284யுத்த காண்டம் 

என்று    வினவினான்;   அன்னவனும் -  அந்த மாதலியும்;
அன்னதனை ஆக  உரை செய்தான் - இராமனை கேட்ட
செய்தியைப் பொருந்துமாறு சொன்னான். 
 

(18)
 

மாதலி விடை
 

9695.

'முப் புரம் எரித்தவனும், நான்முகனும், முன்நாள்,
அப் பகல் இயற்றி உளது; ஆயிரம் அருக்கர்க்கு
ஒப்பு உடையது; ஊழி திரிகாறும் உலைவு இல்லா
இப் பொரு இல் தேர் வருவது இந்திரனது; - எந்தாய்!
 

'எந்தாய்  -   என் தந்தையே!; முப்புரம் எரித்தவனும் -
திரிபுரம்   எரித்த   சிவபெருமானும்; நான்முகனும் - பிரமனும்;
முன்   நாள்    அப் பகல்  -   முதல் நாளாகிய படைப்புக்
காலத்தில்;  இயற்றி  உளது  - செய்தது   (இத்தேர்); ஆயிரம்
அருக்கர்க்கு ஒப்பு உடையது
- தன் ஒளிச் சிறப்பால் ஆயிரம்
சூரியர்களுக்கு  நிகரானது; ஊழி திரிகாறும் உலைவு இல்லா -
ஊழிக்காலம் மாறும்போதும் அழிவிலாததாகி; இத்தேர் வருவது
- வந்துள்ள இந்தத் தேர்; இந்திரனது- இந்திரனுக்கு உரியது. 
 

(19)
 

9696.

'அண்டம் இது போல்வன அளப்பு இல அடுக்கிக்
கொண்டு பெயரும்; குறுகும்; நீளும்; அவை 

கோளுற்று

உண்டவன் வயிற்றினையும் ஒக்கும், உவமிக்கின்;
புண்டரிக! நின் சரம் எனக் கடிது போமால்.
 

புண்டரிக   -   (கண், கரம், கால் போன்ற  உறுப்புகளால்)
தாமரையானே!; இதுபோல்வன அண்டம் அளப்பு இல - இந்த
அண்டம் போல அளவற்ற அண்டங்களை; அடுக்கிக்  கொண்டு
பெயரும்
- தன்னிலே அடுக்கிக்கொண்டு இயங்கவல்லது; குறுகும்,
நீளும்
- தேவைப்படும்போது அளவிலே குறுகும் அல்லது நீளும்;
உவமிக்கின் அவை கோளுற்று உண்டவன்  வயிற்றினையும்
ஒக்கும்
- உவமை சொல்ல வேண்டுமாயின் அந்த அண்டங்களை
அனைத்தையும் பற்றி   உண்டவனாகிய திருமாலின் வயிற்றையும்
ஒக்கும்; நின் சரம் எனக் கடிது போம் - உன்னுடைய அம்பு
போல் வேகமாகப் போகும். 
 

(20)