9697. | 'கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால் |
| உண்ணும் விசையால்; உணர்வு பின் படர ஓடும்; |
| விண்ணும் நிலனும் என விசேடம் இலது; அஃதே, |
| எண்ணும் நெடு நீரினும், நெருப்பிடையும் - எந்தாய்! |
|
'எந்தாய்...; கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால் - கண், மனம், விரைவாக இயங்குகின்ற காற்று ஆகிய இவற்றைக் கண்டால்; விசையால் - அவற்றினும் விரைவாக; உண்ணும் - (இந்தத் தேர்) உண்டுவிடும் (அதாவது அவற்றை வேகத்தால் தோற்கடிக்கும்); உணர்வு பின் படர ஓடும்- அறிவுகூட தன் பின்வருமாறு இது முன்னேறி ஓடும்; விண்ணும் நிலனும் என விசேடம் இலது - (இயங்குவதற்கு) ஆகாயம் நிலம் என வேறுபாடு இல்லாதது; எண்ணும் நெடு நீரினும் நெருப்பிடையும் அஃதே - எண்ணப்படுகின்ற பெரிய நீரிலும் நெருப்பிடையிலும் அதுவே (அதாவது, இத்தேரின் இயக்கத்துக்கு நீர் நெருப்பு என்ற வேறுபாடு இல்லை). |
விண், மண், நீர், நெருப்பு ஆகிய எவற்றிலும் எவற்றிடையிலும் இயங்குவது இந்தத்தேர். |
(21) |
9698. | 'நீரும் உளவே, அவை ஒர் ஏழு? நிமிர்கிற்கும் |
| பாரும் உளவே, அதின் இரட்டி? அவை பண்பின் |
| பேரும் ஒரு காலை, ஒரு காலும் இடை பேராத் |
| தேரும் உளதே, இது அலால்? - உலகு செய்தோம்! |
|
உலகு செய்தோய் - உலகங்களைப் படைத்தவனே!; நீரும் உளவே அவை ஓர் ஏழு - ஏழு கடல்களும் உள்ளன அன்றோ?; நிமிர்கிற்கும் பாரும் உளவே அதின் இரட்டி- கடல்மேல் நிமிர்கின்ற உலகங்களும் ஏழு கடல்கள் போல இரண்டு மடங்காக பதினான்கு உள்ளன அன்றோ?; அவை - அந்தக் கடல்களும் உலகங்களும்; பண்பின் பேரும் ஒரு காலை - தம் இயல்பிலிருந்து ஒரு காலத்திலே மாறுபடும்; இது அலால் - இந்தத் தேரைத் தவிர; ஒரு காலும் இடை பேராத் தேரும் உளதே- ஒரு காலத்திலும் தன் இயல்பிலிருந்து நிலை பெயராத தேரும் இருக்கிறதோ?' (இல்லை). |
(22) |
9699. | 'தேவரும், முனித் தலைவரும், சிவனும், மேல்நாள், |
| மூஉலகு அளித்த அவனும், முதல்வ! முன் நின்று |