| ஏவினர்; சுரர்க்கு இறைவன் ஈந்துள இது' என்றான், |
| மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி, வலித்தான். |
|
முதல்வ! - தலைவனே!; தேவரும் முனித்தலைவரும் சிவனும்மேல்நாள் மூ உலகு அளித்த அவனும் - தேவர்கள், முனிவர்களின் தலைவர்கள், சிவபிரான், பண்டொரு காலத்தில் மூன்று உலகங்களையும் படைத்த நான்முகன் ஆகியோர்; முன் நின்று ஏவினர்- முன் வந்து ஏவினார்கள்; (அவர்களின் கட்டளையை ஏற்றுச்) சுரர்க்கு இறைவன்- தேவர்களின் அரசனான இந்திரன்; ஈந்துள (து) இது - கொடுத்ததாகும் இந்தத்தேர்'; என்றான் - என்று சொல்லியவனாய்; மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி - குதிரையின் மனப்போக்கினைப் பொருத்தமாக உணர்ந்து (தேர் செலுத்த வல்ல) மாதலி; வலித்தான் - சொலக்கருதி உறுதிபடச் சென்னான். |
(23) |
இராமன் ஐயமும் தெளிவும் |
9700. | ஐயன் இது கேட்டு, 'இகல் அரக்கர் அகல் மாயச் |
| செய்கைகொல்?' எனச் சிறிது சிந்தையில் |
| நினைந்தான்; |
| மெய் அவன் உரைத்தது என வேண்டி, இடை பூண்ட |
| மொய் உளை வயப் பரி மொழிந்த, முது வேதம். |
|
ஐயன் - இராமபிரான்; இது கேட்டு - மாதலி உரைத்த இதனைக் கேட்டு; 'இகல் அரக்கர் அகல் மாயச் செய்கை கொல்' என- ஒருகால் இது பகைவராகிய அரக்கர்களின் பெரிய மாயையால் விளைந்த செயலோ என்று; சிந்தையில் சிறிது நினைந்தான் - மனத்திலே ஓரளவு எண்ணினான்; 'அவன் உரைத்தது மெய்' என வேண்டி - அந்த மாதலி உரைத்தது உண்மையே எனப் புலப்பட வேண்டி இடை பூண்ட- தேரிலே கட்டப்பட்ட; மொய் உளை வயப் பரி- செறிந்த பிடரி மயிர் கொண்ட வலிய குதிரைகள்; முது வேதம் மொழிந்த - பழமையான வேதங்களை ஓதின. |
(24)
|
9701. | 'இல்லை இனி ஐயம்' என எண்ணிய இராமன், |
| நல்லவனை, 'நீ உனது நாமம் நவில்க!' என்ன, |