முக்கணான் முதலினோரை - சிவபிரான் முதலிய முத்தேவர்களுடன்; உலகொரு மூன்றினோடும் - மூன்று உலகங்களோடும்; புக்கபோர் எல்லாம் வென்று நின்ற - உண்டான போர்கள் அனைத்தையும் வெற்றி கொண்டு நின்ற; என் புதல்வன் மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன் போலாம்- என் மகன் மானிடரில் ஒருவன் கொல்ல இறப்பவனோ? மானமேரு உக்கிட அணு ஒன்று ஓடி- (இந்நிகழ்ச்சி) பெருமையை உடைய மேரு மலை சிதறும்படி ஓர் அணு ஓடிச்சென்று; உதைத்தது போலும் அம்மா! - 'உதைத்தது' என்று சொல்லுவது போல உள்ளது! என்னே வியப்பு! |
போலாம் - உரையசை, அம்மா - வியப்பிடைச் சொல். |
(52) |
9238. | 'பஞ்சு எரி உற்றது என்ன அரக்கர்தம் பரவை |
| எல்லாம் |
| வெஞ் சின மனிதர் கொல்ல, விளிந்ததே; |
| மீண்டது இல்லை; |
| அஞ்சினேன் அஞ்சினேன்; அச் சீதை என்று |
| அமுதால் செய்த |
| நஞ்சினால், இலங்கை வேந்தன் நாளை இத் |
| தகையன் அன்றோ?' |
|
பஞ்சு எரி உற்றது என்ன- பஞ்சுப் பொதியில் நெருப்புப் பற்றி எரிந்தது என்னுமாறு; அரக்கர் தம் பரவை எல்லாம்- அரக்கர் தம் படைக்கடல் எல்லாம்; வெஞ்சின மனிதர் கொல்ல - கொடிய கோபத்தை உடைய (இரு) மனிதர் - கொல்ல; விளிந்ததே, மீண்டது இல்லை- இறந்ததே அன்றி உயிர் மீண்டது இல்லை! அச்சீதை என்று அமுதால் செய்த நஞ்சினால் - அந்தச் சீதை என்ற பெயரை உடைய அமிழ்தினால் செய்த நஞ்சினால்; இலங்கை வேந்தன் நாளை இத்தகையன் அன்றோ- இலங்கைக்கு அரசனாகிய இராவணன் நாளைக்கு இத்தகையன் (இறந்து பட்டவன்) அன்றோ? அஞ்சினேன்! அஞ்சினேன்! - (ஆதலால்) அஞ்சினேன் அஞ்சினேன்! |
தன் கணவன் மேல் குற்றம் காணாளாய், சீதையை அமுதாகத் தோன்றிய நஞ்சு என்றாள். தன் கணவன் கண்களுக்கு அமுதெனத் தோன்றியதனாலன்றோ அவன் கொணர்ந்தான் என்றபடி, இனி |