பக்கம் எண் :

292யுத்த காண்டம் 

(இராமனுக்குத்)   தேரை நல்கினர்; அரிந்தமன் வெல்லும் -
பகைவரை   அடக்கும்   (ஆற்றல்  மிக்க)   மன்னவனாகிய
இராமபிரான் வெல்லுவான்,; என்றற்கு - என்று கருதுவதற்கு;
ஐயுறவு இல்- எவ்வித ஐயமும் இல்லை'; என்று அஞ்சார்-
என்று   கூறி   அச்சம்   நீங்கியவர்களாய்;   திரிந்தனர் -
(மீண்டும்   போர்க்களம் எங்கும்)   சுற்றி  வந்தனர்; மரமும்
கல்லும் சிந்தினர்
  - மரங்களையும் கற்களையும் (அரக்கர்
மேல்)    எறிந்தனர்; முழக்கின்   பெற்றி  -  (அப்போது)
வானரர்கள் செய்த ஆரவாரத்தின் தன்மையானது;'திசையொடு
அண்டம் பிரிந்தன கொல்'
- 'திசைகளும்  அண்டங்களும்
பிளந்தன   போலும்'; என்று எண்ணப் பிறந்தது  - என்று
கருதும்படி எழுந்தது. 
 

(4)
 

பலவகை ஒலிகள்
 

9708.

வார்ப் பொலி முரசின் ஓதை, வாய்ப்புடை வயவர்

ஓதை,

போர்த் தொழில் களத்து மற்றும் முற்றிய பொம்மல்

ஓதை,

ஆர்த்தலின், யாரும் பார் வீழ்ந்து அடங்கினர்,

இருவர் ஆடல்

தேர்க் குரல் ஓதை பொங்க, செவி முற்றும் செவிடு

செய்த.

 

வார்ப்பொலி   முரசின்  ஓதை   - வார்க்கட்டமைந்த
முரசுகளிலிருந்து எழும் ஓசையும்;வாய்ப்புடை வயவர் ஓதை-
போரியற்றும்   வாய்ப்புபெற்ற   வீரர்கள் எழுப்பும்  ஓசையும்;
போர்த்    தொழில்களத்து  -  போர் நிகழுகின்ற களத்தில்;
மற்றும் முற்றிய   பொம்மல் ஓதை - பிற போர்ப்படைகள்
நிரம்பி     நின்று  எழுப்பிய    மகிழ்ச்சி  ஆரவார ஓசையும்;
ஆர்த்தலின்     -   கூடியொலித்தலால்;   யாரும்  - (இரு
திறத்திலுமுள்ள)   அனைவரும்;   பார்வீழ்ந்து அடங்கினர்-
தரையில்       விழுந்து   அடங்கிப்   போயினர்; இருவர் -
இராமபிரான்  இராவணன்   என்னும்   இருவருடைய; ஆடல்
தேர்க்குரல்
- அசைகின்ற தேர்களின் ஒலி; ஓதை  பொங்க -
முழக்கம்   மேலெழுந்து;   செவி   முற்றும்  செவிடு செய்த - 
அனைவர்தம் செவிகளையும் செவிடாக்கின. 
 

(5)