மாதலியிடம் இராமன் கருத்து உரைத்தல் |
9709. | மாதலி வதனம் நோக்கி, மன்னர்தம் மன்னன் |
| மைந்தன், |
| 'காதலால் கருமம் ஒன்று கேட்டியால்; களித்த சிந்தை |
| ஏதலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை, என்தன் |
| சோதனை நோக்கிச் செய்தி; துடிப்பு இலை' என்னச் |
| சொன்னான். |
| |
மன்னர்தம் மன்னன் மைந்தன்- (தசரதச்) சக்கரவர்த்தி திருக் குமாரனாகிய இராமன்; மாதலி வதனம் நோக்கி - தன் தேர்ச்சாரதியாகிய மாதலியின் முகத்தைப் பார்த்து; 'காதலால் கருமம் ஒன்று கேட்டியால் - அன்போடு நான் கூறும் செயல் ஒன்றினைக் கேட்பாயாக; களித்த சிந்தை எதலன் - மிதப்பு மிக்க சிந்தனை கொண்டவனாகிய (நம்) பகைவன்; மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை - தன்னுடைய மீறிய செயல்களையெல்லாம் செய்த பிறகு; என்தன் சோதனை நோக்கி - என் தூண்டுதலைக் கவனித்து; செய்தி - (உன் தேரோட்டும்) தொழிலைச் செய்வாயாக; துடிப்பு இலை- (இப்போது) விரைதல் வேண்டுவதில்லை; என்னச் சொன்னான்- என்று கூறினான். |
இராவணனைக் கண்டதும் மாதலி பால் ஏற்பட்ட பரபரப்பையும் விரைவையும் கவனித்தமையால் இராமன் இவ்வாறு கூறினான். 'பகைவனின் ஆர்ப்பாட்ட மெல்லாம் முடியட்டும். நமக்கு அவசரமில்லை' எனப் பணியாளிடம் உணர்த்திய பாங்கும், அவனிடம் 'காதலால்' கருத்துரைக்கும் பாங்கும் இராமபிரானின் தலைமைப் பண்பை உணர்த்துகின்றன. |
(6) |
மாதலி மறுமொழி |
9710. | 'வள்ளல்! நின் கருத்தும், மாவின் சிந்தையும், |
| மாற்றலார்தம் |
| உள்ளமும், மிகையும், உற்ற குற்றமும், உறுதிதானும், |
| கள்ளம் இல் காலப் பாடும், கருமமும், |
| கருதேன்ஆகில், |
| தெள்ளிது என் விஞ்சை!' என்றான்; அமலனும், |
| 'செவ்விது!' என்றான். |