'வள்ளல்! - வரையாது அருளும் இயல்புடையாய்!; நின் கருத்தும் - உன் திருக்கருத்தையும்; மாவின் சிந்தையும்- புரவிகளின் மனப்போக்கையும்; மாற்றலார் தம் உள்ளமும் - பகைவரது உட்கருத்தையும்; மிகையும் - பகைவர் தம் மிகுதியையும்; உற்ற குற்றமும் - (அதனால்) நேரும் தீமைகளையும்; உறுதிதானும் - மேற்கொள்ளத் தக்க உறுதியையும்; கள்ளமில் காலப்பாடும் - வஞ்சனையின்றி (இயல்பாகச்) செயல்படும் கால நிலையையும் கருமமும் - எடுத்துக்கொண்ட செயலின் திறத்தையும்; கருதேன் ஆகில்- (ஆராய்ந்து) என் தொழிலைச் செய்யேனாகில்; என் விஞ்சை - என் தேரோட்டும் கலைத்தொழில்; தெள்ளிது- மிக மிகத் திறம்பட்டது அன்றோ?' (ஆகாது என்றபடி!); என்றான் - என்று கூறினான்; அமலனும் - (யாதுமோர்) குற்றமற்ற இராமபிரானும்; செவ்விது என்றான்- (அவன் செப்பிய பாங்குணர்ந்து) 'நன்று' என மொழிந்தான். |
(7) |
இராவணனிடம் மகோதரன் வேண்டுதல் |
9711. | 'தோன்றினன் இராமன், ஈதால், புரந்தரன் துரகத் |
| தேர்மேல்; |
| ஏன்று இருவருக்கும் வெம் போர் எய்தியது; |
| இடையே, யான் ஓர் |
| சான்று என நிற்றல் குற்றம்; தருதியால் விடை |
| ஈண்டு' என்றான் - |
| வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை |
| மன்னை. |
| |
வான் தொடர் குன்றம் அன்ன - வானத்தை அளாவிய மலை போன்ற (தோற்றத்தை உடைய); மகோதரன் - மகோதரனாகிய வீரன்; எந்தாய்- எம் தலைவனே; புரந்தரன் - இந்திரனுக்குரிய; துரகத் தேர்மேல் - குதிரைகள் பூட்டிய தேரின் மீது; இராமன் தோன்றினன் - இராமன் (இதோ) காட்சி தருகின்றான்; ஏன்று - (ஒருவரை ஒருவர்) எதிர்த்து நிற்கும்; இருவருக்கும் - உங்கள் இருவரிடையேயும்; வெம்போர் எய்தியது - கொடிய போர் (நடக்கும் நேரம்) நெருங்கி விட்டது; இடையே - உங்கள் இருவருக்கும் இடையே; யான் ஓர் சான்று என - நான் ஒரு சாட்சியாக; நிற்றல்- (வறிதே) நிற்பது; குற்றம் - பிழையாகும்; ஈண்டு - இப்போது; விடை தருதியால் - (வேறிடத்தில் போர் புரிய) |