பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்295

விடை   தருவாயாக'; என்றான் - என வேண்டினான்; இலங்கை
மன்னை
- (என) இலங்கை வேந்தனாகிய இராவணனிடம். 
 

(8)
 

இராவணன் கட்டளை
 

9712.

'அம்புயம் அனைய கண்ணன்தன்னை யான் அரியின் 

ஏறு

தும்பியைத் தொலைத்தது என்னத் தொலைக்குவென்;

தொடர்ந்து நின்ற

தம்பியைத் தடுத்தியாயின், தந்தனை கொற்றம்'

என்றான்;

வெம்புஇகல் அரக்கன், 'அஃதே செய்வென்' என்று,

அவனின் மீண்டான்.

 

(இவ் வேண்டு    கோளைக் கேட்ட இராவணன்), அம்புயம்
அனைய கண்ணன் தன்னை
- செந்தாமரை போன்ற கண்களை 
உடைய   இராமனை; அரியின் ஏறு - ஆண்   சிங்கம் (ஒன்று);
தும்பியைத்    தொலைத்தது  என்ன - யானையை அழித்தது
என்னும்    படியாக;   யான்     தொலைக்குவன்   -  நான் 
அழித்தொழிப்பேன்;   தொடர்ந்து நின்ற  தம்பியை - இணை 
பிரியாது   நிற்கும் தம்பியாகிய  இலக்குவனை; தடுத்தியாயின் 
(நீ) போரிட்டுத் தடுப்பாயானால்; கொற்றம் தந்தனை - (எனக்கு)
வெற்றித்   தேடித் தந்தவனாவாய்; என்றான் - என்று கூறினான்;
வெம்பு இயல் அரக்கன்- (சினத்தால்) வெம்பும்  தன்மையுடைய
மகோதரன்; 'அஃதே செய்வென் என்று- 'அவ்வாறே செய்வேன்'
என்று; அவனின் மீண்டான்- இராவணனிடத்தினின்றும் திரும்பிச்
சென்றான். 
  

(9)
 

இடையே இராமன் தேர் அணுக சாரதிக்கு மகோதரன் இட்ட
கட்டளை
 

9713.

மீண்டவன் இளவல் நின்ற பாணியின் விலங்கா

முன்னம்,

ஆண்தகை தெய்வத் திண் தேர் அணுகியது;

அணுகும்காலை,

மூண்டு எழு வெகுளியோடும், மகோதரன் முனிந்து,

'முட்டத்

தூண்டுதி தேரை' என்றான்; சாரதி தொழுது 

சொன்னான்: