மீண்டவன் - இராவணன் பக்கமிருந்து திரும்பி வந்த மகோதரன்; இளவல் நின்ற பாணியின் - தம்பி இலக்குவன் இருந்த பக்கத்திற்கு; விலங்கா முன்னம் - நீங்குவதற்கு முன்னர்; ஆண்டகை - ஆண்மை மிக்க இராமனுடைய; தெய்வத்திண்தேர் - தெய்வத் தன்மை மிக்க வலிமையான தேர்; அணுகியது - நெருங்கி வந்தது; அணுகும் காலை - அவ்வாறு நெருங்கிய போது; மகோதரன் - மகோதரன்; மூண்டெழு வெகுளியோடும் - பொங்கி எழுகின்ற சினத்தோடு; முனிந்து - கோபித்து; 'முட்டத்தூண்டுதி தேரை' - தேரை முட்டும்படி செலுத்துவாயாக; என்றான்- என்று கட்டளையிட்டான்; சாரதி- தேர்ப்பாகன்; தொழுது சொல்லும்- வணங்கி உரைக்கத் தொடங்கினான். |
(10) |
9714. | 'எண் அருங் கோடி வெங் கண் இராவணரேயும், |
| இன்று |
| நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ, கிடப்பது |
| அல்லால்? |
| அண்ணல்தன் தோற்றம் கண்டால், ஐய! நீ கமலம் |
| அன்ன |
| கண்ணனை ஒழிய, அப் பால் செல்வதே கருமம்' |
| என்றான். |
| |
ஐய - ஐயனே; அண்ணல் தன் தோற்றம் கண்டால் - பெருமை மிக்க இராமபிரானின் உருவினைக் கண்டால்; எண்ணரும் கோடி வெங்கண் இராவணரேயும் - (இந்த ஓர் இராவணன் மட்டுமன்று) எண்ணுதற்கரிய கோடிக்கணக்கான கொடுங்கண்கள் படைத்த இராவணர்களாயினும்; இன்று நண்ணிய பொழுது- இன்று (இராமனை) நெருங்கி வந்தாலும்; கிடப்பதல்லால்- (களத்தில்) இறந்து கிடப்பார்களே யல்லாமல்; மீண்டும் நடப்பரோ?- (உயிருடன்) மீண்டும் செல்ல வல்லவர்களோ? (செல்லார்) ஆதலால்; நீ- நீ; கமலம் அன்ன கண்ணனை- தாமரை போலும் கண்களையுடைய இராமபிரானை; அப்பால் ஒழிய - (விட்டு நீங்கி) வேறிடம்; செல்வதே- போவதே; கருமம் - (பொருத்தமான) செயல்; என்றான்- என்று (சாரதி மகோதரனிடம்) கூறினான். |
(11) |
9715. | என்றலும், எயிற்றுப் பேழ் வாய் மடித்து, 'அடா! |
| எடுத்து நின்னைத் |
| தின்றனென்எனினும் உண்டாம் பழி' என, சீற்றம் |
| சிந்தும் |