பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்297

குன்று அன தோற்றத்தான்தன் கொடி நெடுந்

தேரின் நேரே

சென்றது, அவ் இராமன் திண் தேர்; விளைந்தது,

திமிலத் திண் போர்.

 

என்றலும்  -   என்று  (சாரதி)  கூறுதலும்;  (மகோதரன்)
எயிற்றுப்   பேழ்வாய்    மடித்து
  -  (கோரைப்)   பற்கள்
தோன்றும் பிளந்த   தன் வாயை   மடித்து; 'அடா  -  ஏடா!;
நின்னை   எடுத்து
  -  என்னை   மறுத்துப் பேசிய) உன்னை
வாரியெடுத்து;  தின்றனன்    எனினும்  -  உண்டேனாயினும்;
பழிஉண்டாம்'  - அதனால்   எனக்குப்  பழி   நேர்ந்துவிடும்'
(ஆதலால் அது  தவிர்ந்தேன்); என  -  என்றுரைக்க;   சீற்றம்
சிந்தும்
  - சினத்தை   வெளியிடும்;  குன்றன  தோற்றத்தான்
தன்
- மலை போன்ற உருவத்தையுடைய (மகோதரனின்); கொடி
நெடுந்தேரின் நேரே
- கொடிகள் கட்டிய இரதத்திற்கு நேராக;
அவ்விராமன் திண்தேர் சென்றது - அந்த இராமபிரானுடைய
வலிய தேர் சென்றது; திமிலத் திண்போர்- முழக்கத்தையுடைய
பெரும் போர்; விளைந்தது- உண்டாயிற்று. 
 

(12)
 

இராமன் - மகோதரன் போர்
 

9716.

பொன் தடந்தேரும், மாவும், பூட்கையும், புலவு உண்

வாட்கைக்

கல் தடந் திண் தோள் ஆளும், நெருங்கிய கடல்கள்

எல்லாம்

வற்றின, இராமன் வாளி வடஅனல் பருக; வன் தாள்
ஒற்றை வன் தடந் தேரோடும் மகோதரன் ஒருவன்

சென்றான்.

 

(அப்போரில்   மகோதரனிடமிருந்த)  பொன் தடந்தேரும்-
பொன்   மயமான பெரிய   தேர்களும்; மாவும் - குதிரைகளும்;
பூட்கையும் - யானைகளும்; புலவு வாட்கை  - புலால்  நாறும்
வாளேந்திய கரங்களையும்; கல் தடந் திண் தோள் ஆளும் -
கல்போல் வலிய அகன்று திரண்ட தோள்களையும் உடைய காலாட்
படைகளும்; நெருங்கிய  - (கொண்டு)   நெருக்கமுற்ற; கடல்கள்
எல்லாம்
- படைக் கடல்கள் யாவும்; இராமன் வாளி வடவனல்
பருக
  - இராமபிரானின்   அம்புகள்   என்னும் வடவைக் கனல்
குடிக்க; வற்றின- வறண்டு (ஏதுமில்லாமல்) போயின