(எனவே); ஒற்றை வன் தடந் தேரோடும்- (மிஞ்சிய) தன் ஒரே பெரிய வலிய தேருடன்; வன்தாள் மகோதரன் - வலிய (கால்களை உடைய) வனாகிய மகோதரன்; ஒருவன் சென்றான்- தன்னந்தனியாக இராமபிரான் பக்கம் சென்றான். |
(13) |
9717. | அசனிஏறு இருந்த கொற்றக் கொடியின்மேல், அரவத் |
| தேர்மேல், |
| குசை உறு பாகன்தன்மேல், கொற்றவன் குவவுத் |
| தோள்மேல், |
| விசை உறு பகழி மாரி வித்தினான்; |
| விண்ணினோடும் |
| திசைகளும் கிழிய ஆர்த்தான்; தீர்த்தனும், முறுவல் |
| செய்தான். |
| |
(மகோதரன்), அசனி ஏறு இருந்த கொற்றக் கொடியின் மேல் - (இராமபிரானுக்கு இந்திரன் அளித்த தெய்வத் தேர் மீது பறந்த) பேரிடி எழுதப் பெற்றிருந்த வெற்றிக் கொடியின் மீதும்; அரவத் தேர் மேல் - ஒலிமிக்க அத்தேரின் மீதும்; குசை உறு பாகன் தன் மேல்- கடிவாளம் பற்றிய தேர்ப்பாகன் மாதலி மீதும்; கொற்றவன் குவவுத் தோள் மேல்- வெற்றியாளனாகிய இராமபிரானின் மலைத் தோள்கள் மீதும்; விசை உறு பகழி மாரி - வேகம் கொண்ட அம்பு மழையை; வித்தினான் - விதை தூவுவது போல் பாய்ச்சினான்; (மேலும்) விண்ணினோடும் திசைகளும் கிழிய - வானும் திசைகளும் கிழிந்து போயிற்றென்னுமாறு; ஆர்த்தான் - முழக்கமிட்டான்; தீர்த்தனும்- தூயவனாகிய இராமபிரானும்; முறுவல் செய்தான் - புன்னகை பூத்தான். |
(14) |
9718. | வில் ஒன்றால், கவசம் ஒன்றால், விறலுடைக் கரம் |
| ஓர் ஒன்றால், |
| கல் ஒன்று தோளும்ஒன்றால், கழுத்து ஒன்றால், |
| கடிதின் வாங்கி, |
| செல் ஒன்று கணைகள், ஐயன் சிந்தினான்; செப்பி |
| வந்த |
| சொல் ஒன்றாய்ச் செய்கை ஒன்றாய்த் துணிந்தனன், |
| அரக்கன் துஞ்சி. |