ஐயன் - இராமபிரான்; வில் ஒன்றால் - (மகோதரனின்) வில்லை ஒரு கணையாலும்; கவசம் ஒன்றால் - அவன் கவசத்தை ஒரு கணையாலும்; விறலுடைக்கரம்- வலிமைமிக்க அவன் கைகளை; ஓர் ஒன்றால் - ஒவ்வொரு கணையாலும்; கல்லொன்று தோளும் ஒன்றால் - கற்பாறை போன்ற தோள்களை ஒரு கணையாலும்; கழுத்து ஒன்றால் - கழுத்தினை ஒரு கணையாலும்; செல் ஒன்று கணைகள் கடிதின் வாங்கி - விரைவு பொருந்திய அம்புகளை வேகமாய்; சிந்தினான்- செலுத்தினான்; அரக்கன் - இராட்சதனான மகோதரன்; செப்பி வந்த சொல் ஒன்றாய் - (இராவணனிடம்) செப்பி வந்த மொழி ஒன்றாகவும்; செய்கை ஒன்றாய் - செயல் மற்றொன்றாகவும் ஆகும் வண்ணம்; துஞ்சி துணிந்தனன்- இறந்து உடல் துண்டாகி வீழ்ந்தான். |
(15) |
இராவணனோடு இராமன் போரிடுதல் |
9719. | மோதரன் முடிந்த வண்ணம், மூவகை உலகத்தோடும் |
| மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் |
| கண்டான், |
| சேதனை உண்ணக் கண்டான்; 'செல விடு, செல |
| விடு!' என்றான்; |
| சூதனும் முடுகித் தூண்ட, சென்றது, துரகத் திண் |
| தேர். |
| |
மோதரன் முடிந்த வண்ணம் - மகோதரன் இறந்த நிலையை; மூவகை உலகத்தோடு - மூன்று உலகங்களோடு; மாதிரம் எவையும் வென்ற - திசைகள் அனைத்தையும் வெற்றி கொண்ட; வன்தொழில் அரக்கன் - கொடுமையே தன்மையாகக் கொண்ட இராவணன்; கண்டான் - பார்த்தான்; சேதனை உண்ண- (இந்நிகழ்ச்சி) தன் அறிவை உண்ணவே; செலவிடு, செலவிடு என்றான் - (தன் பாகனை நோக்கி) தேரைச் செலுத்து, செலுத்து என்றான்; துரகத் திண்தேர் - குதிரை பூட்டிய வலிய தேர்; சூதனும் முடுகித் தூண்ட - தேர்ப்பாகனும் விரைந்து தூண்ட; சென்றது- வேகமாக முன்னே சென்றது. |
(16) |
9720. | 'பனிப் படாநின்றது என்னப் பரக்கின்ற சேனை |
| பாறித் |
| தனிப்படான்ஆகின் இன்னம் தாழ்கிலன்' என்னும் |
| தன்மை |