'இராவணன் நாளை இங்ஙனம் மடிவானே' என கூறப்பொறாளாய், ''இலங்கை வேந்தன் நாளை இத்தகையன் அன்றோ'' என்றாள்! |
(53) |
இராவணன் சீதையை வெட்டச் சொல்லுதல் |
9239. | என்று அழைத்து இரங்கி ஏங்க, 'இத் துயர் நமர்கட்கு |
| எல்லாம் |
| பொன் தழைத்தனைய அல்குல் சீதையால் புகுந்தது' |
| என்ன, |
| 'வன் தழைக் கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை, |
| வாளால் |
| கொன்று இழைத்திடுவென்' என்னா, ஓடினன், |
| அரக்கர் கோமான். |
|
என்று அழைத்து இரங்கி ஏங்க- என்று, மண்டோதரி அழைத்து ஏங்கா நிற்க; அரக்கர் கோமான் - (அதைக் கேட்டிருந்த) அரக்கர் வேந்தனாகிய இராவணன்; நமர்கட்கு எல்லாம் இத்துயர் - நம்மவர்க்கு எல்லாம் இந்தத் துயரம்; 'பொன் தழைத்தனைய அல்குல்- பொன் தழைத்தாற்போன்ற அல்குலை உடைய; சீதையால் புகுந்தது என்ன- சீதையினால் வந்தது என்று சினந்து; 'வன்தழைக் கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை- வன்மை தழைத்த கல் போன்ற நெஞ்சினை உடைய வஞ்சகத்தாளை (சீதையை); வாளால் கொன்று இழைத்திடுவேன்' என்னா ஓடினான்- வாளால் கொன்று பகைவர்க்குத் தீங்கு புரிவேன் என்று (சீதை இருக்குமிடம் நோக்கி) ஓடினான். |
தான் பிறன்மனை நோக்கிய பிழை நினையாமல், தன்மேல் அன்பு செலுத்தாமல் தன் கணவனையே நினைந்து நிற்கும் சீதையைக் 'கல் நெஞ்சங் கொண்ட 'வஞ்சகி' எனக்கடிய நினைக்கும் இராவணச் செயல் மிகவும் அடாத செயலாம். இத் தன் குற்றம் நோக்காத் தன்மையே அவன் குலத்தோடு அழிதற்குக் காரணமாயிற்று. |
(54) |
மகோதரன் இராவணனைத் தடுத்தல் |
9240. | ஓடுகின்றானை நோக்கி, 'உயர் பெரும் பழியை |
| உச்சிச் |
| சூடுகின்றான்' என்று அஞ்சி, மகோதரன், துணிந்த |
| நெஞ்சன், |