பக்கம் எண் :

300யுத்த காண்டம் 

நுனிப் படாநின்ற வீரன், அவன் ஒன்றும்

நோக்காவண்ணம்

குனிப் படாநின்ற வில்லால், ஒல்லையின் நூறிக்

கொன்றான்.

 

பனிப்படா  நின்றது   என்ன - பனி எங்கும் பொழிந்து
நின்றாற்போல;      பரக்கின்ற  சேனை  -   விரிந்திருக்கிற
(இராவணன்) படை; பாறி  - சிதறி;   தனிப்படான் ஆகின்-
தான் தன்னந்   தனியனாகாதவரை;   இன்னம் தாழ்கிலன் -
(இவ்விராவணன்)   இன்னும்   கீழடங்கமாட்டான்;   என்னும் 
தன்மை
  - என்னும்   நிலையை; நுனிப்படா நின்ற வீரன்-
நன்கு   சிந்தித்து அறிந்த வீரனான    இராமபிரான்;   அவன்
ஒன்றும் நோக்கா வண்ணம்
- தன் செயல் ஒன்றையும் அவன் 
காணாதபடி; குனிப்படா நின்ற வில்லால்- வளைந்த வில்லால்;
ஒல்லையில் - விரைவாக; நூறிக் கொன்றான் - சின்னா
பின்னமாக்கி அழித்தான். 
 

(17)
 

9721.

அடல் வலி அரக்கற்கு அப் போழ்து, அண்டங்கள்

அழுந்த, மண்டும்

கடல்களும் வற்ற, வெற்றிக் கால் கிளர்ந்து

உடற்றும்காலை,

வடவரை முதல ஆன மலைக் குலம் சலிப்ப மானச்,
சுடர் மணி வலயம் சிந்தத் துடித்தன, இடத்த

பொன்-தோள்.

 

அப்போழ்து - அவ்வேளையில்; அடல்வலி அரக்கற்கு-
மிகுந்த ஆற்றலையுடைய இராவணனுக்கு; அண்டங்கள் அழுந்த-
அண்டங்கள் அனைத்தும் தாழவும்; மண்டும் கடல்களும் வற்ற-
நிறைந்த   கடல்கள்    எல்லாம்  வற்றவும்;   வெற்றிக்கால்
(எல்லாவற்றையும்) வென்று தீர்க்கும் (ஊழிக்) காற்று;  கிளர்ந்து
பொங்கி யெழுந்து;  உடற்றும் காலை - துன்புறுத்தும் பொழுது;
வடவரை முதல ஆன   -   மேரு   மலை முதலாக   உள்ள;
மலைக்குலம் சலிப்ப மான- பெருமலை வரிசைகள் அசைவன
போன்று; சுடர்மணி வலயம் சிந்த- ஒளிவீசும் மாணிக்கங்கள்
பதித்த   வாகுவலயங்கள்   சிதறுமாறு;  இடத்த பொன்தோள்
துடித்தன
- இடதுபுறத்துப் பொன்மயமான தோள்கள் துடித்தன. 
 

(18)