கலி விருத்தம் |
9722. | உதிர மாரி சொரிந்தது, உலகு எலாம்; |
| அதிர வானம் இடித்தது; அரு வரை |
| பிதிர வீழ்ந்தது, அசனி; ஒளி பெறாக் |
| கதிரவன்தனை ஊரும் கலந்ததால். |
| |
உலகெலாம் - உலகு முழுவதிலும்; உதிரமாரி - இரத்த மழை; சொரிந்தது - பொழிந்தது; வானம் - முகில்கள்; அதிர இடித்தது - உலகம் அதிரும்படி இடியொலி எழுப்பின; அருவரை பிதிர - பெருமலைகள் சிதறும்படி; அசனி - இடி; வீழ்ந்தது - (மலைகள் மேல்) விழுந்தது; ஒளிபெறாக் கதிரவன் தனை- ஒளி இழந்த ஞாயிற்றை; ஊர்- ஊர்கோளும்; கலந்தது- சூழ்ந்து கொண்டது; (ஆல் - அசை) |
ஊர்கோள் - பரி வேடம்; பரிவேடம் கால அருக்கன் உதயத்துச் சாரில் வட்டந் தலமழிவாம் என்பர் முன்னோர். |
(19) |
9723. | வாவும் வாசிகள் தூங்கின; வாங்கல் இல் |
| ஏவும் வெஞ் சிலை நாண் இடை இற்றன; |
| நாவும் வாயும் உலர்ந்தன; நாள்மலர்ப் |
| பூவின் மாலை புலால் வெறி பூத்ததால்.* |
| |
வாவும் வாசிகள் - (இராவணன் தேரில் கட்டிய) பாயும் குதிரைகள்; தூங்கின - தேரில் கட்டியவாறே உறங்கின; வெஞ்சிலை - கொடிய விற்கள்; வாங்கலில்- வளைக்கப்பட்ட போது; ஏவும் - அம்புகளும்; நாண் இடை இற்றன - நாண்கயிற்றில் வைக்கும்போதே முறிந்து போயின; நாவும் வாயும் உலர்ந்தன - (இராவணன்) வாய்களும் நாக்குகளும் காய்ந்து போயின; நாள் மலர்ப் பூவின் மாலை - புத்தம் புதிதாக அன்று மலர்ந்த பூக்களால் கட்டப்பட்ட மாலை; புலால் வெறி - மாமிச நாற்றத்தை; பூத்த - தோற்றுவித்தது. |
(ஆல் - அசை, வாசி - குதிரை, ஏ - அம்பு. |
(20) |
9724. | எழுது வீணை கொடு ஏந்து பதாகைமேல் |
| கழுகும் காகமும் மொய்த்தன; கண்கள் நீர் |
| ஒழுகுகின்றன, ஓடு இகல் ஆடல் மா; |
| தொழுவில் நின்றன போன்றன, சூழி மா. |