பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்303

எதிர் எதிரே நிற்கும் இராம இராவணர் தோற்றம்
 

9727.

கருமமும் கடைக்கண் உறு ஞானமும்,
அருமை சேரும் அவிஞ்சையும் விஞ்சையும்,
பெருமை சால் கொடும் பாவமும் பேர்கலாத்
தருமமும் எனச் சென்று, எதிர் தாக்கினார்.
 

(இராவணனும் இராமபிரானும் அங்கு); கருமமும்- வினையும்;
கடைக்கண்   உறு  ஞானமும்  - (நன்னெறியின்) கடைசியில்
எய்தும் ஞானமும் (போலவும்); அருமை சேரும் அவிஞ்சையும்-
(பொருள்களின்  நிலையை)   அறியாது   தடுக்கும் அவிச்சையும்;
விஞ்சையும்   -   (அதற்கு மாறான)  வித்தையும்  (போலவும்);
பெருமை சால்- அளவிற் பெரிய; கொடும் பாவமும் - கொடிய
பாவமும்;   பேர்கலா   -   (எந்நிலையிலும்)   பயன்தருதலில்
தவிராத; தருமமும் என - அறமும் (போலவும்); எதிர் சென்று
தாக்கினார்
- ஒருவர் மற்றொருவரை எதிர்த்துத் தாக்கினார்கள்.
 

கருமம், அவிஞ்சை, பாவம் என்பன இராவணனுக்கும் ஞானம்,
விஞ்சை, தருமம்  என்பன  இராமனுக்கும் உவமையாயின. இவை
ஒன்றற்கொன்று  எதிர்நிலையினவாயின.  விஞ்சை   -   வித்தை
அவிஞ்சை - அஞ்ஞானம். 
 

(24)
 

9728.

சிரம் ஓர் ஆயிரம் தாங்கிய சேடனும்,
உரவு கொற்றத்து உவணத்து அரசனும்,
பொர உடன்றனர் போலப் பொருந்தினர்,
இரவும் நண்பகலும் என ஏற்றனர்.
 

சிரம்  ஓர்  ஆயிரம்  தாங்கிய சேடனும்  - தலைகள்
ஆயிரம் படைத்த   ஆதி சேடனும்;   உரவு கொற்றத்து  - 
வலிமையும் வெற்றியும் படைத்த; உவணத்து அரசனும் - கருட
வேந்தனும்; பொர உடன்றனர் - போரிட எதிர்த்து  நின்றனர்;
போலப் பொருந்தினர்- என்பது போலப் பொருந்தி நின்றனர்;
இரவும் நண்பகலும்  என - நள்ளிரவும்   நண்பகலும் போல;
ஏற்றனர்- (அவ்விருவரும்) இசைந்து தோன்றினர். 
 

(25)
 

9729.

வென்றி அம் திசை யானை வெகுண்டன
ஒன்றை ஒன்று முனிந்தவும் ஒத்தனர்;