| அன்றியும், நரசிங்கமும் ஆடகக் |
| குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார். |
| |
வென்றி அம் திசை யானை- வெற்றி மிக்க அழகிய திக்கு யானைகள்; வெகுண்டன - சினம் கொண்டனவாய்; ஒன்றை ஒன்று - ஒன்றோடொன்று; முனிந்தவும்- வெறுத்து நின்றன; ஒத்தனர் - போன்றிருந்தனர்; அன்றியும் - அதுவல்லாமலும்; நரசிங்கமும் - நரசிங்க மூர்த்தியும்; ஆடகக் குன்றம் அன்னவனும் - பொன்மலை போன்ற இரணியனும்; பொரும் கொள்கையார்- ஒப்பென்று சொல்லுமாறும் விளங்கினார்கள். |
இராமபிரான் நரசிங்கமாகவும், இராவணன் இரணியனாகவும் கூறப்பட்டனர். |
(26) |
9730. | துவனி வில்லின்பொருட்டு ஒரு தொல்லைநாள், |
| 'எவன் அவ் ஈசன்?' என்பார் பொர, ஏற்று, எதிர் |
| புவனம் மூன்றும் பொலங் கழலால் தொடும் |
| அவனும் அச் சிவனும் எனல் ஆயினார். |
| |
தொல்லை ஒரு நாள் - பண்டொரு காலத்தில்; துவனி வில்லின் பொருட்டு - முழக்கம் நிறைந்த (இரண்டு) விற்கள் காரணமாக; 'எவன் அவ் ஈசன்?' என்பார் - எவன் உண்மையில் தலைமை சான்ற கடவுள் என அறிய விரும்பியவரான இமையவருக்காய்; பொர - போரிட முற்பட்டு; ஏற்று - அவ்விற்களை எடுத்து; எதிர் - ஒருவரை யொருவர் எதிர்த்து நின்ற; புவனம் மூன்றும் பொலங்கழலால் தொடும் - மூன்று உலகங்களையும் தன் பொற் பாதங்களால் தொட்ட; அவனும்- அந்தத் திருமாலும்; அச்சிவனும் - அந்தச் சிவபிரானும்; எனல் ஆயினார் - என்னும் நிலையினராகக் (இராமனும் இராவணனும்) காட்சி தந்தார்கள். |
(27) |
9731, | கண்ட சங்கரன் நான்முகன் கைத் தலம் |
| விண்டு அசங்க, தொல் அண்டம் வெடித்திட, |
| அண்ட சங்கத்து அமரர்தம் ஆர்ப்பு எலாம் |
| உண்ட சங்கம் இராவணன் ஊதினான். |
| |
கண்ட - (இராம இராவணர் போர் நிகழ்ச்சிகளை வானத்திலிருந்து) பார்த்த; சங்கரன் நான் முகன்- சிவனும் |