பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்305

பிரமனும்; கைத்தலம் - தங்கள் கரங்கள்; விண்டு அசங்க
- நிலைதிரிந்து  நடுங்கவும்; தொல்  அண்டம் வெடித்திட
- பழமையான  பிரமாண்டப்  பகுதி  வெடித்துப் போகவும்; 
அண்டம்
- விண்வெளியில்;  சங்கத்து   அமரர்  தம்  
-    திரண்ட   தேவர்களின்;   ஆர்ப்பெலாம் - பெரு 
முழக்கங்களையெல்லாம்; உண்ட- (முன்பு தேவரை வெற்றி 
கொண்ட காலத்தில்)   உண்டு   முடித்த;   சங்கம்- தன் 
சங்கினை; இராவணன் ஊதினான் - இராவணன் முழக்கம் 
செய்தான்.
 

(28)
 

9732.

சொன்ன சங்கினது ஓசை துளக்குற, 

'என்ன சங்கு?' என்று இமையவர் ஏங்குற, 

அன்ன சங்கைப் பொறாமையினால், அரி - 

தன்ன வெண் சங்கு தானும் முழங்கிற்றால். 

 

அன்ன - அந்த  (இராவணனின்);   சங்கை - சங்கின் 
(ஓசையைப்);  பொறாமையினால்- (தான்)  பொறுத்துக்   
கொள்ளாமையினால்; சொன்ன - மேற்குறித்த; சங்கினது 
ஓசை
-  (இராவணனது)  சங்கின்  ஒலி;   துளக்குற
நிலைகுலையும்படியாகவும்; இமையவர் - தேவர்கள்;'என்ன 
சங்கு?' என்று
- இது  யாருடைய சங்கு?' என்று; ஏங்குற
(ஐயுற்று) ஏக்கமுறவும்; அரிதன்ன- திருமாலினுடைய; வெண் 
சங்கு  தானும்
- பாஞ்ச  சன்னியம்  என்னும் வெண்ணிற  
வலம்  புரிச்சங்கும்; முழங்கிற்று- (தானே) முழக்கம் செய்தது. 
(ஆல் - அசை).
 

திருமாலின் சங்கம் தானே முழங்கும் இயல்பினது என
அறியலாகிறது.
 

(29)
 

9733.

ஐயன் ஐம் படைதாமும் அடித் தொழில் 

செய்ய வந்து அயல் நின்றன; தேவரில் 

மெய்யன் அன்னவை கண்டிலன், வேதங்கள் 

பொய் இல் தன்னைப் புலன் தெரியாமைபோல். 

 

ஐயன்- திருமாலின்; ஐம்படை தாமும் - சங்கு, சக்கரம்,
கதை, வாள், வில் என்ற ஐந்து படைகளும்; அடித் தொழில்
செய்ய
- (தம் தலைவனுக்குத்) தொண்டு செய்யும் பொருட்டு;
அயல் நின்றன - பக்கத்தில்  காத்து  நின்றன; (ஆனால்),
வேதங்கள் - மறைகள்; பொய்யில் தன்னை - பொய்யற்ற
மெய்யான தன்னை; புலன் தெரியாமை போல்- (மானிட
வடிவெடுத்த அவனை) அறிந்து