பக்கம் எண் :

306யுத்த காண்டம் 

கொள்ளாதவாறு போல; அன்னவை- அவ்வைம்படைகளை; 
தேவரில் மெய்யன்
-  தேவர்களுள்  மெய்ப்பொருளாயுள்ள 
திருமால்; கண்டிலன்- காணவில்லை.
 

தானெடுத்த வேடத்தை வேதங்கள் எப்படி அறியவில்லையோ 
அது போன்ற மனித அவதாரமெடுத்த தான் ஐம்படைகளையும் 
அறியவில்லை.
 

ஐம்படைகளாவன: சுதரிசனம் (சக்கரம்), பாஞ்சன்னிபம்
(சங்கு), கௌமோதகி (கதை), நாந்தகம் (வாள்), சார்ங்கம் 
(வில்)
 

புலன் தெரிதல் - உண்மை அறிதல்.
 

(30)
 

 
9734.

ஆசையும் விசும்பும் அலை ஆழியும் 

தேசமும் மலையும் நெடுந் தேவரும் 

கூச, அண்டம் குலுங்க, குலம் கொள் தார் 

வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான். 

 

(அப்போது), ஆசையும்- திசைகளும்; விசும்பும் - வானமும்;   
அலை ஆழியும்
- அலைகள்  சூழ் கடலும்;  தேசமும் - பூமிப் 
பரப்பும்;   மலையும் - மலைகளும்;   நெடுந் தேவரும்
பெருமையால் உயர்ந்த தேவர்களும்; கூச -  நடுங்கவும்; அண்டம்  
குலுங்க
- அண்டம் அசைந்தாடவும்; குலம் கொள்தார்- பலவகை 
மலர்க்குலமும் அமைந்த மாலையை அணிந்த; வாசவன் - 
இந்திரனுடைய; சங்கை- சங்கினை; மாதலி வாய் வைத்தான்
(தேர்ப்பாகனாகிய) மாதலி தன் வாயில் வைத்து ஊதினான்.
 

(31)
 

இராம இராவணப்போர் தொடக்கம்
 

9735.

துமில வாளி அரக்கன் துரப்பன 

விமலன் மேனியின் வீழ்வதன் முன்னமே, 

கமல வான் முக நாடியர் கண் கணை 

அமலன் மேனியில் தைத்த அனந்தமால். 

 

அரக்கன் துரப்பன- இராவணன் செலுத்துகின்றனவாகிய; 
துமில வாளி
- ஆரவாரத்தோடு  வரும் அம்புகள்; விமலன் 
-  மாசு மறுவற்ற  இராமபிரான்;   மேனியின்  வீழ்வதன்  
முன்னமே
-   திருமேனியில் வந்து பாய்வதற்கு முன்பாகவே;  
கமல முக
-  தாமரை போன்ற முகமுடைய; வான் நாடியர்
வானத்துத்  தேவ கன்னிகையர்;  கண்கணை- கண்களாகிய 
அம்புகள்; அமலன்