மேனியில் - குற்றமற்ற இராமபிரான் மேனியில்; தைத்த - தைத்தவை; அனந்தம் - கணக்கற்றவையாகும் (ஆல் - அசை). |
(32) |
| 9736. | சென்ற தேர் ஒர் இரண்டினும் சேர்த்திய |
| குன்றி வெங் கண் குதிரை குதிப்பன, |
| ஒன்றை ஒன்று உற்று, எரி உக நோக்கின; |
| தின்று தீர்வன போலும் சினத்தன. |
| |
சென்ற - போர்க்களத்துக்கு வந்த; தேர் ஓர் இரண்டினும்- இராமபிரான்; இராவணன் ஆகிய இருவரின் ஒப்பற்ற தேர்களிலும்; சேர்த்திய - கட்டப்பட்டிருந்த; குன்றி வெங்கண்- குன்றிமணி போல் சிவந்த கண்களையுடைய;குதிரை- குதிரைகள்; குதிப்பன- எதிரெதிர் பாய்வனவாயும்; ஒன்றை ஒன்று - ஒன்றோடொன்று; உற்று- நெருங்கி; எரி உக நோக்கின- நெருப்புச் சிந்தும்படி பார்ப்பனவாயும்; தின்று தீர்வன போலும்- ஒன்றை யொன்று கடித்து விழுங்கி விடுவன போல; சினத்தன - கோபம் கொண்டனவாயும் (காட்சி தந்தன). |
(33) |
| 9737. | கொடியின்மேல் உறை வீணையும், கொற்ற மா |
| இடியின் ஏறும், முறையின் இடித்தன - |
| படியும் விண்ணும் பரவையும் பண்பு அற |
| முடியும் என்பது ஓர் மூரி முழக்கினால். |
| |
கொடியின் மேல் உறை- (இராவணன்) கொடி மீதிலிருந்த; வீணையும் -; கொற்றம்- வெற்றியையுடைய; மா இடியின் ஏறும்- (இராமபிரான்) கொடி மீதிருந்த இடியேறும்; படியும் - பூமியும்; விண்ணும்- வானமும்;பரவையும்- கடலும்; பண்பு அற - தம் இயல்பிற் குன்றி; முடியும்- அழிந்து விடும்; என்பது ஓர் மூரி முழக்கினால்- என்று கூறத்தக்க ஆற்றல் மிக்க ஓசையோடு; முறையின் இடித்தன - மாறி மாறி பேரொலி எழுப்பின. |
மானுடத் தலையைக் கொடியில் இராவணன் கொண்டிருந்தானென்று முதல் நூல் கூறும் (வை.மு.கோ.உரை) |
(34) |
| 9738. | ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்து என்னலாம், |
| வீழி வெங் கண் இராவணன் வில் ஒலி; |
| ஆழி நாதன் சிலை ஒலி, அண்டம் விண்டு |
| ஊழி பேர்வுழி, மா மழை ஒத்ததால். |