வீழி- வீழிப்பழம் போன்ற; வெங்கண் இராவணன்- கொடிய கண்களையுடைய இராவணன்; வில்ஒலி- வில்லின் ஓசை; ஏழு வேலையும்- ஏழு கடல்களும்; ஆர்ப்பு எடுத்து என்னலாம்- பேரொலி எழுப்பின என்று கூறுதற்குரியதாய் இருந்தது; ஆழி நாதன்- சக்கராயுதம் படைத்த இராமபிரானுடைய; சிலை ஒலி- வில்லின் ஒலியோ; அண்டம் விண்டு- விண்வெளி பிளக்கும்படி; ஊழி பேர்வுழி - ஊழிக்காலம் வரும் போது (உண்டாகும்); மாமழை ஒத்தது- பெரு முகில்களில் எழும் இடியோசையை நிகர்த்திருந்தது. |
ஆழி நாதன் - திருப்பாற்கடலின் தலைவன் என்றுமாம். மழை இடியைக் குறித்ததால் ஆகுபெயர். |
வீழி - விழுதி என்னும் செடி. |
(35) |
| 9739. | ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம் |
| வீங்கு வெஞ் சின வீரர் விழுந்தனர் - |
| ஏங்கி நின்றது அலால், ஒன்று இழைத்திலர், |
| வாங்கு சிந்தையர், செய்கை மறந்துளார். |
| |
ஆங்கு நின்ற- (இவ்வொலிகளைச் செவியுற்று) அவ்விடத்திலே நின்ற; அநுமனை ஆதியாம் - அநுமன் முதலாவதாக அமைந்த; வீங்கு வெஞ்சின வீரர- பொங்கும் கொடுங்கோபமுள்ள சிறந்த வீரர்களும்; வீழ்ந்தனர்- தரையில் விழுந்தனர்; ஏங்கி நின்றது அலால்- என்ன செய்வோம் என்று ஏக்குற்று நின்றதன்றி; ஒன்று இழைத்திலர் - வேறு எதுவும் செய்யலாற்றாதவராயினர்; வாங்கு சிந்தையர் - ஓய்ந்த உள்ளத்தினராய்; செய்கை மறந்துளார்- செயலற்றுப் போயினர். |
வாங்குதல் - தாழ்தல் (ஓய்தல்) |
(36) |
| 9740. | 'ஆவது என்னை கொலாம்?' என்று அறிகிலார், |
| 'ஏவர் வெல்வர்?' என்று எண்ணலர் ஏங்குவார், |
| போவர், மீள்வர், பதைப்பர், பொருமலால், |
| தேவரும் தங்கள் செய்கை மறந்தனர். |
| |
தேவரும்- தேவர்களும்; 'ஆவது என்னை கொலாம்- 'என்ன நிகழுமோ'; என்று அறிகிலார்- என்று அறியாதவர்களாய்; 'ஏவர் வெல்வர்?'- 'எவர் தாம் போரில் வெல்வர்?'; என்று எண்ணலர்- |