பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்309

என்று சிந்திக்க முடியாதவர்களாய்; ஏங்குவார்- ஏக்கமுறுவார்; 
போவர்
- (இலக்கறியாது) செல்வர்; மீள்வர்- திரும்பி வருவர்;
பதைப்பர்- உள்ளம் அஞ்சுவர்;   பொருமலால் - மனம் 
விம்மி; தங்கள் செய்கை மறந்தனர் - தாம் யாதும் செய்யும் 
திறனற்றுப் போயினர்.
 

(37)
 

9741.

சேண அந்தரம் நோக்கலும் திண் சரம், 

பூண முந்தின, சிந்தின பூ மழை, 

காண வந்த கடவுளர் கை எலாம் - 

ஆணவம் துணை யார் உளர் ஆவரோ? 

 

திண்சரம் - (இராமபிரானுடைய) வலிமைமிக்க அம்புகள்; 
சேண அந்தரம் நோக்கலும்
- தொலைவிலுள்ள வானத்தைக்
குறிபார்க்கத்   தொடங்கியதும்;   காண   வந்த  கடவுளர்
கையெலாம்
- காண்பதற்கு   வந்த   தேவர்கள்   கரங்கள்
எல்லாம்; சிந்தின பூ மழை- தூவிய மலர்மாரி;   பூண 
முந்தின
- (வானை)  அழகு  செய்யும்படி  முன்தோன்றின; 
ஆணவம் துணை
- செருக்குக்குத் துணையாக;யார் உளர் 
ஆவரோ?
- யார் தான் இருக்க முடியும்?
 

ஆணவம் இல்லாத இராமனைத் தேவர் கொண்டாடினர்
என்பதாம்.
 

(38)
 

9742.

நீண்ட மின்னொடு வான் நெடு நீல வில் 

பூண்டு இரண்டு எதிர் நின்றன போன்றன - 

ஆண்ட வில்லிதன் வில்லும், அரக்கன்தன் 

தீண்ட வல்லர் இலாத சிலையுமே. 

 

ஆண்ட வில்லி  தன்   வில்லும்-   அனைத்துலகையும்
(அறநெறியில்)   ஆளும்    வில்லாற்றல்  மிக்க  இராமபிரான்
வில்லும்;  தீண்ட  வல்லர் இலாத - பிறரால்  தொட்டெடுக்க
முடியாத; அரக்கன் தன் சிலையுமே- இராவணனின் வில்லும்;
நீல வான்- நீல வானத்தில்;  நெடுவில் - நெடிய இந்திர 
விற்கள்; இரண்டு-  இரண்டு;  நீண்ட  மின்னொடு பூண்டு-
நீண்ட மின்னலாகிய (கயிறு) பூண்டு; எதிர் நின்றன போன்றன
- எதிரெதிர் நின்றாற் போல் விளங்கின.
 

இரண்டு வான விற்கள் மின்னலாகிய கயிற்றுடன் விளங்குவது
போல் இருவர் வில்லும் தோன்றின.
 

(39)