| மாடு சென்று, அடியின் வீழ்ந்து, வணங்கி, 'நின் |
| புகழ்க்கு மன்னா! |
| கேடு வந்து அடுத்தது' என்னா, இனையன |
| கிளத்தலுற்றான்: |
|
ஓடுகின்றானை நோக்கி - (அவ்வாறு சீதை இருக்கும் இடம் நோக்கி) ஓடுகின்ற இராவணனைப் பார்த்து; உயர் பெரும் பழியை உச்சிச்- உயர்ந்த பெரிய பழியைத் தலையில்; சூடுகின்றான் என்று அஞ்சி - சூடிக் கொள்கின்றான் என்று அஞ்சி; மகோதரன் துணிந்த நெஞ்சன் மாடு சென்று- மகோதரன் துணிந்த நெஞ்சனாய் அவன் பக்கத்தில் சென்று; அடியின் வீழ்ந்து வணங்கி - அவன் பாதங்களில் வீழ்ந்து வணங்கி; மன்னா! நின்புகழ்க்கு கேடு வந்து அடுத்தது என்னா - 'மன்னா! நின் புகழுக்கு கேடு வந்துவிட்டது என்று முன் சொல்லி; இனையன கிளத்தலுற்றான்- இத்தன்மையான சொற்களைப் பின்சொல்லலானான். |
உச்சிச் சூடுதலாவது - எல்லோரும் காணுமாறு தலையில் சூடிக் கொள்ளும் மாலை போலப் பழியை ஏற்றலாம். கற்புடைப் பெண்டிரைக் கொல்லுதல் பழிகளுள் தலையாயதாதலின் 'உயர்பெரும் பழி' எனப்பட்டது. தன் மன்னனுக்கு வரும் பழிக்குப் பெரிதும் அஞ்சும் அமைச்சனாதலின் அவன் கோபத்துக்கு அஞ்சானாய் துணிந்த நெஞ்சனாய்த் தன் மன்னனைத் தடுக்கத் துணிகின்றான் என்பதாகும். வான்மீகத்தில் இங்கு இராவணனைத் தடுத்து நிறுத்துபவனாகக் கூறப்படுபவன் 'சுபார்சுவன்' என்பவனாம். |
(55) |
9241. | 'நீர் உளதனையும், சூழ்ந்த நெருப்பு உளதனையும், |
| நீண்ட |
| பார் உளதனையும், வானப் பரப்பு உளதனையும், |
| காலின் |
| பேர் உளதனையும், பேராப் பெரும் பழி பிடித்தி |
| போலாம் - |
| போர் உளதனையும் வென்று, புகழ் உளதனையும் |
| உள்ளாய். |
|
போர் உளதனையும் வென்று புகழ் உளதனையும் உள்ளாய் - போர்கள் அனைத்தையும் வென்று புகழ் அனைத்தையும் பெற்றுள்ளாய்; நீர் உளதனையும் சூழ்ந்த நெருப்பு உளதனையும்- நீர் உள்ளவரையும் பரவிச் சூழும் இயல்பைப் பெற்ற நெருப்பு |