பக்கம் எண் :

312யுத்த காண்டம் 

சிற்றையாளனை- இச்சிறுவனை; தேவர் தம் தேரொடும் -
இந்திரன் தேரினோடும்; பற்றி - கையால் எடுத்து; வானில்
சுழற்றி
- வானில் தூக்கிச் சுழற்றி; எற்று வேன்- நிலத்தின் 
மேல் மோதுவேன்'; என்று உரைக்கும்- என்று (சினத்தால் 
இராவணன்) கூறுவான்; இரைக்கும்- கூக்குரலிடுவான்.
 

(ஆல் - அசை)
 

(44)
 

9748.

'தடித்து வைத்தன்ன வெங் கணை தாக்கு அற, 

வடித்து வைத்தது மானிடற்கே? வலி

ஒடித்து, தேரை உதிர்த்து, ஒரு வில்லொடும்

பிடித்துக் கொள்வென், சிறை' எனப் பேசுமால். 

 

'தடித்து - மின்னலை;   வைத்தன்ன - (திரட்டி) வைத்தாற
போன்ற;வெங்கணை - கொடிய அம்பு; தாக்கு அற - தாக்கும்
வலிமை  அற்றுப்  போகும்படி; மானிடற்கே - இம்மனிதனுக்கு;
வலி  வடித்து  வைத்தது? -  (ஆற்றல்)  வடித்து  வைக்கப்
பட்டுள்ளதோ?  (இல்லை)   ஒடித்து -  வலிமையை  அழித்து;
தேரை  உதிர்த்து 
-  தெய்வத்தேரைப்  பொடியாக்கி;  ஒரு
வில்லொடும்
- ஒப்பற்ற அவன் வில்லோடும்; சிறைபிடித்துக்
கொள்வென் 
-  நான்  அவனைச்  சிறைபிடிப்பேன்';  எனப்
பேசும்
- என்று இராவணன் சினமொழி கூறுவான்.
 

ஆல் - அசை.
 

(45)
 

இராவணன் அம்பு எய்தலும் தடுத்தலும்
 

சந்தக் கலிவிருத்தம்
 

9749.

பதைக்கின்றது ஒர் மனமும், இடை படர்கின்றது ஒர்

சினமும்,

விதைக்கின்றன பொறி பொங்கின விழியும், உடை

வெய்யோன்,

குதைக்கின்றன நிமிர் வெஞ் சிலை குழையக்

கொடுங் கடுங் கால்

உதைக்கின்றன சுடர் வெங் கணை, உரும்ஏறு என,

எய்தான்.