பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்313

பதைக்கின்றது   ஓர்  மனமும் - நடுக்கமுறுகின்ற ஓர் உள்ளப்
பாங்கும்;    இடை   படர்கின்றது  ஓர்   சினமும் - இடையிலே 
பொங்கிப்  படர்கின்ற   கோபமும்;   விதைக்கின்றன   - எல்லாப்
பக்கங்களிலும்  தூவப்படுவதாகிய;  பொறி  பொங்கின விழியும்
நெருப்புத்   துளிகள்  எழும்  கண்களும்;   உடை -  பொருந்திய; 
வெய்யோன்
-   கொடியவனாகிய   இராவணன்; குதைக்கின்றன-
குதை (என்னும் வில்) உறுப்பினின்றும் வெளி வரும் அம்புகள்; நிமிர் 
வெஞ்சிலை  குழைய
- சொரிய நிமிரும்  கொடிய வில்  வளைத்து;
கொடும் கடும் கால்- துன்புறுத்தும் புயல் காற்றை; உதைக்கின்றன
- உற்பத்தி  செய்து  விடும்;  சுடர்  வெங்கணை- ஒளிமிக்க தீய 
அம்புகளை;  உரும் ஏறு என- இடியேறுகள் போல;  எய்தான் -
(சிலையினின்றும்) செலுத்தினான்.
 

குதை - கழுந்து, திரண்ட நுனி (வில் உறுப்பு).
 

(46)
 

9750.

உரும் ஒப்பன, கனல் ஒப்பன, ஊற்றம் தரு கூற்றின் 

மருமத்தினும் நுழைகிற்பன, மழை ஒப்பன, வானோர் 

நிருமித்தன, படை பற்று அற நிமிர்வுற்றன, அமிழ்தப் 

பெரு மத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் 

பெரிய.

 

(இராவணன் ஏவிய அம்புகள்), உரும் ஒப்பன- பேரிடி போன்றன; 
கனல்  ஒப்பன
- நெருப்பை நிகர்த்தன;  ஊற்றம் தரு கூற்றின்
வலிமை மிக்க இயமனுடைய; மருமத்தினும் நுழைகிற்பன- மார்பிலும் 
ஊடுருவ  வல்லன;  மழை ஒப்பன - மழை போலப் பெருக வல்லன; 
வானோர் நிருமித்தன
 - தேவர்களால் உருவாக்கப் பெற்றன;  படை
எதிரிகள்    ஆயுதங்கள்;   பற்று  அற - செறிவு  அற்றுப்  போக; 
நிமிர்வுற்றன
-   மேலேற வல்லன;   அமிழ்தப்  பெரு மத்தினை
அமுதம் (கடைவதற்காகத்  திருப்பாற்கடலில்  இட்ட)  பெருமத்தாகிய 
மந்தர மலையினை; முறை சுற்றிய-   முறையே (கடைகயிறாகச்) சுற்றிய; 
பெரும்பாம்பினும்
- பெரிய பம்பாகிய வாசுகியைக் காட்டிலும்; பெரிய
உருவத்தில் பெரியன.
 

ஓசையால் இடியையும், அழிவால் நெருப்பையும் பெருக்கத்தால்
மழையையும்,   உருவத்தால்    வாசுகியையும்  நிகர்த்தனவாகிய
அம்புகள் தெய்வத்தன்மை உடையனவாகவும், சாவையும் கொல்லும்
திறனுடையனவாகவும் கூறப்பட்டன.
 

(47)