பக்கம் எண் :

314யுத்த காண்டம் 

9751.

'துண்டப்பட நெடுமேருவைத் தொளைத்து, உள் 

உறை தங்காது

அண்டத்தையும் பொதுத்து ஏகும்' என்று 

இமையோர்களும் அயிர்த்தார்;

கண்டத் தெறு கணைக் காற்றினை, கருணைக் 

கடல், கனகச்

சண்டச் சர மழை கொண்டு, அவை இடையே 

அறத் தடுத்தான்.

 

(இராவணன் எய்த அம்புகள்)  நெடு  மேருவை- உயர்ந்த மேரு மலையை; துண்டப்பட-  பிளவுபடுத்தி;   தொளைத்து- ஊடுருவி;
உள்   உறை   தங்காது -    உள்ளை   உறைந்து   நில்லாது;
அண்டத்தையும்  -  விண்வெளியையும்;  பொதுத்து- துளைத்து;
ஏகும் என்று - செல்லும் என்று; இமையோர்களும் - தேவர்களும்; 
அயிர்த்தார்-  ஐயமுற்றார்கள்;  கணைக்  காற்றினை -  (எழும்) 
அம்புப்  புயலை;  கருணைக்  கடல்-  அருட்  கடலாகிய இராமன்;
கனகச் சண்டச்   சரமழை   கொண்டு
-     பொன்மயமானதும்
கொடியதுமான  (தன் அம்பு) மாரியினால்;  அவை இடையே அற-
அவ்வரக்கன்   அம்புகள்  நடுவழியில்  அழிய;   தடுத்தான்
தடுத்துவிட்டான்.
 

(48)
 

9752.

உடையான் முயன்றுறு காரியம் உறு தீவினை உடற்ற, 

இடையூறு உறச் சிதைந்தாங்கெனச் சரம் சிந்தின, 

விறலும்;

தொடை ஊறிய கணை மாரிகள் தொகை தீர்த்தன 

துரந்தான் -

கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்தென, 

கடியான்.

 

உடையான் -   ஒரு    தலைவன்;   முயன்று    உறுகாரியம் 
முயற்சியினால் செய்யும் செயலை; உறுதீவினை - அவனுக்குற்ற தீய 
வினைகள்; உடற்ற- அழிக்க; இடையூறு உற-   தடைகள் ஏற்பட்டு; சிதைந்தாங்கு என- (அச்செயல்) அழிந்தாற் போல; சரம்- இராவணன் அம்புகள்;விறலும் சிந்தின- ஆற்றல் இழந்தன  (ஆனால்);  கடியான் -கொடியவனான இராவணன்; தொடைஊறிய- தொடுத்தலில் சிறந்தனவும்;
தொகை  தீர்ந்தன -  அளவில் மிகுதியாயினவுமான; கணைமாரிகள்
அம்பு மழையை; கடை