ஊறு உறு - யுக முடிவின் பொழுது மிக்கு வருகின்ற; கணமா மழை- அடர்ந்த கருமுகில்கள்; கால்வீழ்த்தென- கீழிறங்கின என்னுமாறு; துரந்தான்- பொழிந்தான். |
ஒருவன் எடுத்த செயல் அவன் பாவத்தால் வீழ்ந்தாற்போல என்னும் உவமை நீதி சான்றதாய்த் திகழ்கிறது. |
(49) |
| 9753. | விண் போர்த்தன; திசை போர்த்தன; மலை |
| போர்த்தன; இமையோர் |
| கண் போர்த்தன; கடல் போர்த்தன; படி போர்த்தன; |
| கலையோர் |
| எண் போர்த்தன; எரி போர்த்தன; இருள் போர்த்தன; |
| 'என்னே, |
| திண் போர்த் தொழில்!' என்று, ஆனையின் உரி |
| போர்த்தவன் திகைத்தான். |
| |
(இராவணன் எய்த அம்புகள்) விண் போர்த்தன- வானை மூடின; திசை போர்த்தன - திசைகளை மறைத்தன; மலை போர்த்தன- மலைகளை மூடின; இமையோர் கண் போர்த்தன - தேவர்கள் விழிகளையும் மறைத்தன; கடல் போர்த்தன - நெடுங்கடல்களையும் தெரியாது தடுத்தன; படி போர்த்தன- நிலத்தையும் மறைத்தன; கலையோர் எண் போர்த்தன- கலை ஞானம் மிக்கவர் எண்ணும் கணக்கையும் பொய்ப்பித்தன; எரி போர்த்தன - நெருப்பைப் போர்த்து வந்தன; இருள் போர்த்தன- இருளை அணைத்து வந்தன; (இதனைக் கண்டு), ஆனையின் உரி போர்த்தவன் - யானைத் தோலை அணிந்த சிவபெருமான்; 'என்னே திண் போர்த் தொழில்!'- எத்துணை பெரிய போர்க்கலை இது'; என்று திகைத்தான்- என்று மனம் மயங்கினான். |
(50) |
| 9754. | அல்லா நெடும் பெருந் தேவரும் மறைவாணரும் |
| அஞ்சி, |
| எல்லார்களும் கரம் கொண்டு இரு விழி பொத்தினர், |
| இருந்தார்; |
| செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது |
| சேனை; |
| வில்லாளனும் அது கண்டு, அவை விலக்கும் |
| தொழில் வேட்டான். |