பக்கம் எண் :

316யுத்த காண்டம் 

(முன் குறித்த சிவபெருமான்) அல்லா- அல்லாத; நெடும்பெருந்
தேவரும்
- உயர்ந்த   பெரிய   தெய்வங்களும்;  மறைவாணரும்
முனிவர்களும்; எல்லார்களும் - மற்றுள யாவரும்; கரம் கொண்டு
தம் கரத்தால்;   இருவிழி   பொத்தினர்    - இரு கண்களையும் 
மூடிக்கொண்டனர்; இருந்தார்- செயலற்றிருந்தனர்; செல் ஆயிரம்
விழுங்கால் 
- ஓராயிரம் இடி    ஒன்றாக  விழுந்தால்;   உகும்
சிதறிப்  போகும்; விலங்கு- மலைக்கு; சேனை  ஒத்தது- (வானர) 
சேனை     நிகராயிற்று;      அது   கண்டு - இந்நிகழ்ச்சியைக் 
கண்டு;    வில்லாளனும் - விற்கலை   வல்ல  இராமனும்;அவை
- இராவணன்   அம்புகளை;    விலக்கும் தொழில்  - தடுக்கும்
செயலை; வேட்டான்- விரும்பி மேற்கொண்டான்.
 

(51)
 

9755.

செந் தீ வினை மறைவாணனுக்கு ஒருவன், 

சிறுவிலை நாள்,

முந்து ஈந்தது ஒர் உணவின் பயன் எனல் ஆயின, 

முதல்வன்

வந்து ஈந்தன வடி வெங் கணை; அனையான் 

வகுத்து அமைத்த

வெந் தீவினைப் பயன் ஒத்தன, அரக்கன் சொரி

விசிகம்.

 

முதல்வன்-  அனைத்துக்கும் முதலாகிய  இராமபிரான்; வந்து
ஈந்தன
-  போர்க்களம்  புகுந்து  எய்தனவாகிய; வடிவெங்கணை-
கூரிதாய்   வடித்த கொடிய    அம்புகள்;   செந்தீவினை- அழல்
ஓம்பும்    அறவினை செய்யும்;  மறைவாணனுக்கு- வேதியனுக்கு; 
சிறு   விலை நாள்- பஞ்ச  காலத்தில்; முந்து ஈந்தது - முந்திக்
கொடுத்த;   ஓர் உணவின் பயன்- உயர்ந்த அன்னதானப் பயன்;
எனல்    ஆயின- என்று   சொல்லுமாறு  வளர்ந்தன; (ஆனால்)
அரக்கன் சொரி விசிகம்  - இராவணன்   எய்த    அம்புகள்;
அனையான்  - அன்னவன்;   வகுத்து   அமைத்த  - தேடித் 
தொகுத்துக்   கொண்ட; வெந்தீ வினைப் பயன் - பாவங்களின் 
பயனை; ஒத்தன- ஒப்பனவாய் அழிந்தன.
 

தக்கவர்க்கு அளித்த தானத்தின் பயன் பெருகும் என்ற
தத்துவம் கூறுகின்றார். சிறு விலை நாள் - பஞ்ச காலம்.
 

'அல்லவை தேய அறம் பெருகும்' - திருக்குறள் 96.
 

(52)