பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்317

இராம இராவணப் பெரும்போர்
  

9756.

நூறாயிரம் வடி வெங் கணை நொடி ஒன்றினின்

விடுவான்,

ஆறா விறல் மறவோன்; அவை தனி நாயகன்

அறுப்பான்;

கூறு ஆயின, கனல் சிந்துவ, குடிக்கப் புனல் குறுகி, 

சேறு ஆயின, பொடி ஆயின, திடர் ஆயின, கடலும். 

 

ஆறா விறல் மறவோன் - வற்றாத வீரத்தைப் பெற்றிருக்கும்
வீரனாகிய   இராவணன்;   நொடி   ஒன்றினின்- ஒரு நொடிப்
பொழுதில்; நூறாயிரம் வடிவெங்கணை- நூறாயிரம் கூரிய கொடிய
அம்புகளை; விடுவான்- ஏவுவான்; அவை- அவ்வம்புகளை; தனி
நாயகன்
- ஒப்பற்ற தலைவனாகிய இராமன்; அறுப்பான்- துண்டு
படுத்துவான்; கூறு ஆயின- (அவ்வாறு) துண்டு படுத்தப்பட்டவை;
கனல் சிந்துவ- நெருப்புப்   பொழிவனவாய்;   குறுகிப் புனல்
குடிக்க
- நெருங்கி    நீரை   அருந்தியமையால்;   கடலும்-
சமுத்திரங்களும்;   சேறு   ஆயின- வற்றிச் சேறாயின;  பொடி
ஆயின
- புழுதி ஆயின;திடர் ஆயின- மண்மேடாகிப் போயின.
 

(53)
 

9757.

வில்லால் சரம் துரக்கின்றவற்கு, உடனே, மிடல் 

வெம் போர்

வல்லான், எழு, மழு, தோமரம், மணித் தண்டு, 

இருப்பு உலக்கை,

தொல் ஆர் மிடல் வளை, சக்கரம், சூலம் இவை 

தொடக்கத்து

எல்லாம் நெடுங் கரத்தால் எடுத்து எறிந்தான், செரு 

அறிந்தான்.

 

வில்லால்- தன்   கை   வில்லால்;  சரம் துரக்கின்றவற்கு-
அம்புகள் எய்கின்ற   இராமனுக்கு (எதிராக);   செரு அறிந்தான்
- போர்க்கலை அறிந்தவனும்;   மிடல்   வெம்போர் வல்லான்-
வலிமையும்    கொடுமையும்   மிக்க   யுத்தத்தில் வல்லவனுமாகிய
இராவணன்; உடனே - மறுகணத்திலேயே;   எழு, மழு, தோமரம்,
மணித்தண்டு, இரும்பு   உலக்கை
- எழு முதல் உலக்கை ஈறான
ஆயுதங்களையும்; தொல்   ஆர்    மிடல்- பழமை   மிக்க
வலிமையுள்ள;   வளை, சக்கரம், சூலம் - வளை    முதலாகிய
படைகளையும்; இவை