பக்கம் எண் :

318யுத்த காண்டம் 

தொடக்கத்து    எல்லாம் -    இவை  தொடங்கிப் பிற படைக்
கருவிகள் அனைத்தையும்;  நெடுங்கரத்தால்- நீண்ட கரங்களால்; 
எடுத்து எறிந்தான்
- எடுத்து வீசினான்.
 

(54)
 

9758.

வேல் ஆயிரம், மழு ஆயிரம், எழு ஆயிரம், விசிகக் 

கோல் ஆயிரம், பிற ஆயிரம், ஒரு கோல் படக் 

குறைவ -

கால் ஆயின, கனல் ஆயின, உரும் ஆயின, கதிய 

சூல் ஆயின, மழை அன்னவன் தொடை பல் வகை 

தொடுக்க.

 

மழை அன்னவன்- முகில்   வண்ண   மேனியனான இராமன்;
தொடைபல் வகை தொடுக்க- பல்வகைப்பட்ட அம்புகளைத் (தன்
வில்லில்)    தொடுத்து   எய்ய; (அவை),    கால்    ஆயின-
காற்றாய் விரைந்தன;   கனல்   ஆயின- நெருப்பாய்   மாறின;
உரும் ஆயின- இடியாய்   ஒலித்தன; கதிய- விரைவு கொண்டன;
சூல் ஆயின- புதிய அம்புகளைக் கருவீன்றன; ஒருகோல் பட-
(அவ்வம்புகளில்)    ஒன்று    பட்ட    மாத்திரத்தில்;   வேல்
ஆயிரம்
- (இராவணன் வீசிய ஆயிரம் வேல்களும்; மழு ஆயிரம்
- ஆயிரம் மழுவாயுதங்களும்; எழு ஆயிரம்- ஆயிரம்  எழு
என்னும்    படைக்கலங்களும்;    விசிகக் கோல் ஆயிரம்-
ஆயிரம் அம்புகளும்; பிற ஆயிரம்- வேறு ஆயிரக்கணக்கான
ஆயுதங்களும்; குறைவ - அழிந்து போயின.
 

(55)
 

9759.

ஒத்துச் செரு விளைக்கின்றது ஒர் அளவின்தலை, - 

உடனே

பத்துச் சிலை எடுத்தான், கணை தொடுத்தான், பல 

முகிலா

தொத்துப் படு நெடுந் தாரைகள் சொரிந்தாலெனத் 

துரந்தான் -

குத்துக் கொடு நெடுங் கோல் படு களிறு ஆம் 

எனக் கொதித்தான்.

 

ஒத்து   (இராமபிரான்) தனக்குச் சமமாக; செருவிளைக்கின்றது
ஓர் அளவின்   தலை
- போர்   நிகழ்த்தும் ஒரு கால அளவில்;
நெடுங்குத்துக் கோல் கொடு- நெடிய அங்குசம்